சமந்தாவை நாக சைதன்யா கழட்டி விட்ட காரணமே இதுதானா? இப்படி மோசமா மாட்டி விட்டாங்களே!

Samantha: சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரின் விவாகரத்து விவகாரத்தில் தொடர்ச்சியாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில் தற்போது இன்னொரு முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. ஒரு கட்டத்தில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அதிலும் தன்னுடைய காலத்தை செலுத்தினார். அப்பொழுது அவருக்கு அங்கு பிரபலமாக இருந்த தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவுடன் காதல் மலர்ந்தது.
இரு வீட்டார் சம்மதத்துடன் இருமத முறைப்படி பிரம்மாண்டமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர தம்பதிகளாக இருவரும் வலம் வந்த நிலையில் நான்காண்டுகள் கழிந்து திடீரென தங்களுடைய திருமணத்தை முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த திடீர் விவாகரத்திற்கு காரணம் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் இருந்த ரகசிய உறவு என்று ஒரு தரப்பு பேசி வந்தது. இந்த சந்தேகத்தை வலு சேர்க்கும் விதமாக நடிகை சமந்தா பல இடங்களில் தான் தன்னுடைய துணையை ஸ்பை செய்யாமல் விட்டேன் என்றும் பேசி இருப்பார்.
அது மட்டுமில்லாமல் நாக சைதன்யாவின் தரப்பு திருமணத்திற்கு பின்னர் சமந்தா ஓவர் கிளாமராக நடித்தது தான் இவர்கள் இடையே ஏற்பட்ட பிரிவிற்கு முக்கிய காரணமாகவும் பேசி வந்தனர். அதுவரை குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்த சமந்தா பேமிலிமேனில் கிளாமர், புஷ்பா ஐட்டம் பாடல் என இறங்கினார்.
இதனால்தான் சைதன்யா தன்னுடைய மனைவியை பிரிந்தார் எனவும் கூறப்பட்டது. தற்போது அவர் சோபிதாவுடன் இரண்டாம் திருமணம் செய்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டார். இந்நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக் செய்து இருக்கும் ஒரு வீடியோ தற்போது மீண்டும் புகைச்சலை கிளம்பி இருக்கிறது.

அந்த வீடியோவில், 624% அதிகமான ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் துணையை விட்டுவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. அங்கேயே தங்கி கவனித்துக்கொள்கிறார்கள் எனப் பேசி இருக்கிறது. இந்த வீடியோவை தான் நடிகை சமந்தா லைக் செய்திருக்கிறார்.
2022ம் ஆண்டில், சமந்தா ஆட்டோ இம்யூன் சம்மந்தப்பட்ட மயோசிடிஸ் நோயால் போராடி வருகிறார். இன்றளவும் அதற்கான சிகிச்சையில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.