இதற்காக தான் எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் எடுக்கவில்லை... வெளியான ருசிகர தகவல்
மணிரத்னம் இயக்கத்தில் மாஸ் ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் படத்தினை எம்.ஜி.ஆர் எடுக்காமல் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக விவரிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கல்கியின் எழுத்தில் உருவான நாவல் பொன்னியின் செல்வன். இக்கதையை தழுவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் உருவாகி இருக்கிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் மாஸ் வெற்றியினை பெற்று இருக்கிறது.
ஆனால் இப்படத்தினை இயக்க பல வருடமாக சினிமா உலகம் முயன்றது. அதிலும் இதே மணிரத்னமே பல வருடமாக முயன்றார். கமல், விஜய், மகேஷ் பாபுவினை வைத்து இப்படத்தினை எடுக்க முயற்சியெல்லாம் நடைபெற்றது. எல்லாமே கடைசியில் தோல்வியில் தான் தழுவியது. ஆனால் இவருக்கெல்லாம் முன்னோடியாக எம்.ஜி.ஆரே பொன்னியின் செல்வன் கதையை தயாரிக்க முடிவு செய்தார்.
இதற்காக படத்தில் நடிக்க நடிகர்களை தேடினார். ஆனால் அவருக்கு கதைக்கு பொருந்தும் பிரபலங்களை கண்டுபிடிக்க முடியாமல் போனது. நாடக நடிகர்களை நடிக்க வைக்கலாம் என நினைத்தால் அவர்கள் எல்லாம் வயதில் முதிர்ந்தவர்களாக இருந்தனர். குந்தவை வேடத்தில் நடிகை பத்மா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டு இருக்கிறார். அவரோ தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம். இதை தொடர்ந்து நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலே எம்.ஜி.ஆரால் அந்த கதையை எடுக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.