நடிகர் எம்.ஜி.ஆர் சில குறிப்பிட தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பார். தேவர் பிலிம்ஸ், ஜெமினி பிக்சர்ஸ், நாகி ரெட்டி என சிலரிடன் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 1930 முதல் திரைப்படங்களை எடுத்து வந்த நிறுவனம் ஏவிஎம். ஏவி மெய்யப்பட்ட செட்டியார் அந்த நிறுவனத்தை ஏற்படுத்தினார்.
பாரம்பரியமான ஏவிஎம் நிறுவனம் தமிழ் சினிமாவின் பல முக்கிய திரைப்படங்களை தயாரித்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பராசக்தி மூலம் அறிமுகம் செய்ததும் இந்த நிறுவனம்தான். இவர்கள் எந்த நடிகரிடமும் போய் கை கட்டி நிற்கமாட்டார்கள். அதேபோல், குறைவான பட்ஜெட்டில் படத்தை எடுத்து சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வது இவர்களின் பழக்கம்.
அதனால்தான், கடந்த பல வருடங்களாக ஏவிஎம் நிறுவனம் சினிமா தயாரிப்பதையே நிறுத்திவிட்டார்கள். ஏனெனில், இப்போதுள்ள நடிகர்கள் கேட்கும் பல கோடி சம்பளங்களை கொடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை என்பதுதான் முக்கிய காரணம். 50,60களில் ஏவிஎம் நிறுவனம் சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களை வைத்து படம் எடுத்தனர். ஆனால், அவர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் செல்லவே இல்லை. ஏனெனில், எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பதில் அவர்களுக்கு ஒரு தயக்கம் இருந்தது.
இதையும் படிங்க: என்னை அவமானப்படுத்துறதுக்கே இந்தப் படத்தை எடுத்தீயா?.. பாக்கியராஜிடம் சீறிய எம்.ஜி.ஆர்…
ஆனால், அந்த தயக்கத்தை உடைத்து அவர்கள் எம்.ஜி.ஆரை அணுகியபோது எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியுடன் நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான திரைப்படம்தான் அன்பே வா. எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் மெகா வெற்றி பெற்ற திரைப்படம் இது. அதோடு, எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்த காதல் படம் இது. வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் இருக்கும் வில்லன்கள் இதில் இருக்க மாட்டார்கள். ஆனாலும் படம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.
அதேநேரம், ஏவிஎம் நிறுனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் மற்றும் கடைசி படமாக அன்பே வா மாறிப்போனது. அதற்கு சில காரணங்களும் இருக்கிறது. ஏவிஎம் நிறுவனத்தை பொறுத்தவரை ஒரு படத்திற்கு போடப்படும் செட்களை அவர்கள் தயாரிக்கும் மற்ற படங்களுக்கும் பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால், தன் படத்திற்கு போடப்படும் செட் வேறு எந்த படத்திலும் வரக்கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் உறுதியாக இருப்பார். ஏனெனில் அப்போதுதான் தனது படத்திற்கு ஒரு தனித்துவம் இருக்கும் என்பது அவரின் எண்ணம்.
எனவே, அன்பே வா படத்திற்காக போடப்பட்ட அந்த வீடு செட்டை கலைத்துவிடும்படி எம்.ஜி.ஆர் சொல்ல, ஏவிஎம் நிறுவனம் விருப்பமில்லை என்றாலும் எம்.ஜி.ஆர் சொன்னதால் அதை கலைத்துவிட்டனர். அதில் அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின் அவர்கள் எம்.ஜி.ஆருடன் இணையவே இல்லை.
இதையும் படிங்க: பராசக்தி முதல் நாள் முதல் காட்சி.. தியேட்டரில் நடந்த மேஜிக்!. இப்படியெல்லாம் கூட நடக்குமா?!…
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…