இமயமலையை விட்டுட்டு தனியா மாலத்தீவுக்கு ரஜினிகாந்த் போன ரகசியம் என்ன?.. புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

Published on: July 20, 2023
---Advertisement---

கடந்த சில ஆண்டுகளாக அதிகப்படியாக நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று கவர்ச்சி உடையில் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், திடீரென நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவில் ஷார்ட்ஸ் உடையை அணிந்து கொண்டு செம கேஷுவலாக கடற்கரையோரம் நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

பொதுவாகவே சினிமா ஷூட்டிங் முடிந்த உடனே நடிகர் ரஜினிகாந்த் அமைதிக்காக இமயமலை செல்வதை தான் வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால், சமீப காலமாக இமயமலைக்கு செல்ல அவரது உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் வழக்கம் போல எங்கே சென்றாலும் பாதுகாப்புக்காக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அழைத்துச் செல்வாரே தற்போது அவரையும் விட்டு விட்டுத் தனியாக சென்றிருப்பது ஏன் என்கிற கேள்வியை எழுப்பி அதற்கான அதிர்ச்சியூட்டும் தகவலையும் சொல்லி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

மாலத்தீவுக்கு சென்ற ரஜினிகாந்த்:

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்கிற மகிழ்ச்சியில் தான் ரஜினிகாந்த் மாலத்தீவுக்கு சென்றுள்ளார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில், இனிமேல், அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகும் ரஜினிகாந்த் ஓய்வுக்காக மாலத்தீவுக்கு தனி விமானத்தில் பறந்து சென்றிருக்கிறார்.

மகளை அழைத்து செல்லாதது ஏன்:

நடிகர் ரஜினிகாந்த் திருப்பதிக்கு சென்றாலும், திருவண்ணாமலைக்கு சென்றாலும், அவருக்கு பாதுகாப்பாக தற்போது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையே அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்று வந்தார்.

இந்நிலையில், மாலத்தீவுக்கு சென்ற ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டுச் செல்ல காரணமே சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட பெரிய குண்டு தான் என பயில்வான் ரங்கநாதன் பற்ற வைத்துள்ளார்.

உதவி இயக்குநருடன் காதல்: 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கிய நிலையில், அந்த படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநருடன் காதலில் விழுந்துள்ளாராம். அவரை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அப்பாவிடம் சொன்ன நிலையில், தான் செம டென்ஷனாகி விட்டாராம் ரஜினிகாந்த்.

வீட்டிலேயே இருந்தால் மகள் முகத்திலேயே விழிக்க வேண்டுமே என்பதால் தான் கொஞ்சம் மனம் நிம்மதியடைய மாலத்தீவுக்கு சென்றுள்ளார் என்றும் கூடிய விரைவிலேயே இந்த விவகாரம் மிகப்பெரியளவில் விஸ்வரூபம் எடுக்கும் என பயில்வான் ரங்கநாதன் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.