லியோ விழாவுக்கு எஸ்.ஏ.சி வராததற்கு இதுதான் காரணமா?!.. அப்போ போட்டோ வெறும் விளம்பரமா?..
Leo Success Meet: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கல்லா கட்டிய திரைப்படமாக லியோ அமைந்தது. வெளியான நேரத்தில் ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளான லியோ திரைப்படம் போக போக வசூலை அள்ளிக் குவித்தது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் விஜய் எப்பவும் போல நான்தான் சக்கரவர்த்தி என நிரூபித்துவிட்டார். பெரிய அளவில் லியோ திரைப்படம் வசூலை பெறாது என திக்கம் திக்கம் பேசி கொண்டிருந்தார்கள்.
இதையும் படிங்க: கமலை இந்தி பட உலகில் இருந்து வெளியேற்ற திட்டம் போட்ட மாஸ் ஹிட் பிரபலம்..!
ஆனால் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேலாக வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெரிய அளவில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் இசை வெளியீட்டு விழா ரத்து என்ற அறிவிப்பு வெளியாகி ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களை நிலைகுலைய வைத்தது.
ஐயோ குட்டிக் கதை போச்சே என்றும் தங்கள் வேதனையை கொட்டித் தீர்த்தார்கள். ஆனால் அவையெல்லாவற்றையும் சரி செய்யும் பொருட்டு லியோ படத்தின் வெற்றிவிழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.
இதையும் படிங்க: வாழ்க்கையே விரக்தியில் முத்து செய்த விஷயம்..! திக்கு தெரியாமல் இருக்கும் மீனா..!
வெற்றிவிழாவிற்கு திரையுலகை சார்ந்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அத்தனை பேரும் விஜயை பற்றி மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் பேசினார்கள். அதை கேட்டு பூரிப்படைவது ஒரு பெற்றோரின் கடமை.
தன் மகன் இந்தளவுக்கு உச்சத்தை அடைந்திருக்கிறான். இத்தனை புகழை சம்பாதித்திருக்கிறான் என்று அவனை அண்ணாந்து ஒரு பெற்றோர் பார்க்கும் போது அவர்கள் உள்ளத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும்.
இதையும் படிங்க: படத்தை பாத்துட்டு சம்பளம் வேண்டாம்னு சொன்ன சூர்யா!.. இவரயா போட்டு அடிச்சீங்க!..
ஆனால் விஜயின் இந்த வெற்றியை பார்க்க அவரது அப்பா எஸ்.ஏ.சி வரவில்லை. தாய் ஷோபா மட்டும் வந்திருந்தார். இதைப் பற்றி சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு சித்ரா லட்சுமணன் ‘எப்பேற்பட்ட உச்சத்தை தொட்ட கதாநாயகனாக இருந்தாலும் தன் அப்பாவை அழைத்தால்தானே விழாவிற்கு வரமுடியும்’ என்ற பதிலை கூறினார்.
இதிலிருந்து எஸ்.ஏ.சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. ஆனால் சில தினங்களுக்கு முன் எஸ்.ஏ.சிக்கு உடல் நிலை சரியில்லை என்று விஜய் பார்க்க போய் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். அப்போ அதெல்லாம் ஒரு விளம்பரத்திற்குத்தானா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.