உண்மையிலேயே இதுதான் பிரச்சினை! ஜென்டில்மேன் படத்தில் சரத்குமார் நடிக்காததன் காரணம்

sarath
தமிழ் சினிமாவில் 90 கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். இயல்பாகவே ஒரு பத்திரிக்கையாளரான சரத்குமார் ஆரம்பத்தில் ஒரு துணை நடிகராக தான் சினிமாவிற்குள் நுழைந்தார். அதுவும் எதிர்மறையான கதைப்பாத்திரத்தில் நடித்து மக்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருந்தார்.

sarath1
அவர் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் சூரியன். அந்தப் படத்தில் மொட்டை தலையுடன் சரத்குமார் தோன்றியிருக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியமாக பார்க்க வைத்தது. அந்தப் படத்தின் மாபெரும் வெற்றி சரத்குமாரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாற்றியது. மேலும் அவரை அனைவரும் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்க தொடங்கினர்.
இதையும் படிங்க : தமிழில் ஹிட் படங்களில் அறிமுகமாகி ஃப்ளாப் ஆன கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?
அந்தப் படத்தை அடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சரத்குமாருக்கு கிடைத்தது. அவருடைய வெற்றி படங்களின் லிஸ்டில் ஏகப்பட்ட படங்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. குறிப்பாக நாட்டாமை நட்புக்காக சேரன் பாண்டியன் சூரிய வம்சம் போன்ற பல படங்கள் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

sarath2
அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளியான ஜென்டில்மேன் படத்திலும் முதலில் சரத்குமார் தான் கமிட் ஆகி இருந்தார். அதுவும் சங்கர் இந்த மாதிரி கதை வைத்திருக்கிறார் என்பதை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோனிடம் சொன்னதே சரத்குமார் தான். அதே நேரத்தில் பவித்ரன் இயக்கத்தில் ஐ லவ் இந்தியா படத்திலும் சரத்குமார் ஒப்பந்தமாகி இருந்தார்.
இதற்கிடையில் குஞ்சுமோனுக்கும் பவித்திரனுக்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்ததாம். அதனால் குஞ்சுமோன் சரத்குமார் இடம் பவித்ரன் இயக்கத்தில் அந்த படத்தில் நடிக்காதே என்று சொன்னாராம். ஆனால் சரத்குமாரின் வாழ்க்கையில் பவித்ரன் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதை சூரியன் படத்தின் மூலம் அறிந்திருக்க முடியும். ஏனெனில் சூரியன் படத்தை இயக்கியதே பவித்ரன் தான்.

sarath3
அந்த ஒரு நன்றிக் கடனுக்காக தான் ஜென்டில்மேன் படத்தில் இருந்து சரத்குமார் விலகினாராம். அதுமட்டுமில்லாமல் ஜென்டில்மேன் படத்தில் மீசை இருக்கக் கூடாது என்று சங்கர் கூறினாராம். அதே சமயம் ஐ லவ் இந்தியா படத்தில் மீசை இருக்க வேண்டும் என்று சில பல பிரச்சனைகள் இருந்ததாலும் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று சரத்குமார் ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : இயக்குனர் பி.வாசுவை வச்சி ஒரு குப்பை படம் தயாரிச்சேன்!.. அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!..