எல்லா மொழிகளிலும் கலக்கிய கன்னடத்துப் பைங்கிளி.. மலையாள சினிமாவை மட்டும் வெறுத்தது ஏன்னு தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-05-03 06:13:16  )
saro
X

sarojadevi

அன்றைய கால சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை சரோஜாதேவி. கன்னடத்து பைங்கிளி என்றும் அபிநய சரஸ்வதி என்றும் மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். சினிமாவில் வருவதற்கு முழு காரணமே அவருடைய அம்மாதானாம்.

ஆரம்பத்தில் சரோஜாதேவிக்கு சினிமாவில் வருவதற்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை. ஆனால் அவருடைய அம்மாவின் விருப்பத்தின் பெயரில்தான் முதன் முதலில் கன்னட படம் ஒன்றில் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஒரு சாதாரண நடிகையாகவே நடித்து வந்த சரோஜா தேவியை எம்ஜிஆர் தன்னுடைய நாடோடி மன்னன் என்ற படத்தின் மூலம் தமிழ் உலகில் அறிமுகப்படுத்தினார்.

அந்தப் படம் சரோஜாதேவிக்கு பெரிய புகழையும் ஒரு மரியாதையையும் பெற்று தந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் ஒரு சூப்பர் ஸ்டாராகவே பலம் வந்தார் சரோஜாதேவி.

இன்றைய காலகட்டத்தில் வருடத்திற்கு ஒரு படம் என்ற வீதம் நடிகர்கள் நடிகைகள் நடித்துவரும் நிலையில் அப்பொழுது சரோஜாதேவி வருடத்திற்கு 30 படம் என்று படு பிஸியாக சினிமாவில் கலக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் எல்லா மொழி படங்களிலும் நடித்து வந்த சரோஜாதேவிக்கு அனைத்து மொழி சினிமாக்களிலும் உள்ள முன்னணி நடிகர்கள் அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த காலம் அது. இப்படி பல மொழிகளில் நடித்து வந்த சரோஜாதேவி மலையாள சினிமாவில் மட்டும் ஒரு படம் கூட நடிக்கவில்லை.

அதற்கான காரணத்தை தற்போது ஒரு பேட்டியில் சரோஜா தேவியே கூறியிருக்கிறார். அதாவது அன்றைய காலகட்டத்தில் மலையாள சினிமாவில் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு மேலே ஒரு துண்டு மட்டும் போட்டுக் கொண்டு நடிப்பார்களாம். அதுவும் முழுவதுமாக மறைக்கும்படியாக இருக்காதாம். அந்த காரணத்தினாலேயே சரோஜாதேவி அப்படி நடிக்க மாட்டேன் என்று மலையாள சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் இப்பொழுது மலையாள சினிமா முழுவதுமாக மாறிவிட்டது என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : சிவாஜி படத்தால் பல பஞ்சாயத்துக்களை சந்திச்சிருக்கேன்… சிறுவயதில் எஸ்.ஏ.சிக்கு நடந்த சம்பவம்!…

Next Story