கதை கேட்கும் போது சிவாஜி தூங்குவது ஏன்??.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்..

sivaji
தமிழ் சினிமாவில் நடமாடும் நடிப்பு பல்கலைக் கழகமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தன் கண்ணசைவில் வசனங்களை அள்ளிவீசக் கூடிய அளவிற்கு நடிப்பு அரக்கனாக இருந்தவர். இவர் அறிமுகமான பராசக்தியில் இவர் பேசிய வசனங்கள் இன்றளவும் நம் காதை கிழிக்கின்றன.

sivaji1
வீரமிகுந்த வசனங்களை மிகுந்த உணர்வுப்பூர்வமாக பேசுவதில் இவரை விட வல்லவர் வேறு யாருமில்லை. மூன்று தலைமுறைகளாக நடித்து மக்கள் மத்தியில் மகத்தான இடம் பெற்ற சிவாஜி அவ்வப்போது கதை கேட்கும் போது தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாராம். ஏன் தூங்குகிறார் என்ற காரணத்தை எழுத்தாளர் பரத் ஒரு பேட்டியின் போது கூறினார். எழுத்தாளரான பரத் பல சீரியல்களை இயக்கவும் செய்திருக்கிறார்.
மேலும் பல நாடகங்களை எழுதியும் இருக்கிறார். சிவாஜி நடித்து ஓய்ந்த காலம் அது. பரத்தின் ஒரு நாடகத்தால் ஈர்க்கப்பட்ட சிவாஜி குடும்பத்தார் இந்த நாடகத்தில் சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதி சிவாஜியிடம் கதை சொல்ல பரத்தை வரவழைத்திருக்கின்றனர். பரத்தும் சிவாஜி முன் வந்து கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே சிவாஜி கொரட்டை விட்டு தூங்கிவிட்டாராம்.

sivaji2
அப்போது பரத் கதை சொல்வதை நிறுத்த சிவாஜி முழுச்சிப்பாராம். திரும்பவும் கதை ஆரம்பிப்பாராம். இப்படியே செய்த பரத்திற்கு கதை சொல்லும் ஆர்வமே இல்லாமல் எப்படியோ கதையை சொல்லி முடித்துவிட்டாராம். சிவாஜிக்கும் பிடித்துப் போக அந்த கதை படமாக்க ஏற்பாடுகள் நடந்தனவாம்.
படத்திற்கு ஸ்கிரீன்ப்ளேயும் பரத்தை தான் செய்ய சொல்லியிருக்கிறார் சிவாஜியின் சகோதரரான சண்முகம். பரத்தும் ஸ்கிரீன்ப்ளே தயார் செய்து சண்முகத்திடம் சொல்ல ஸ்கிரீன்ப்ளேயையும் சிவாஜியிடம் சொல்லிவிடு சென்று சொன்னாராம்.
ஆனால் பரத் ‘முடியவே முடியாது , அவர் தூங்கிவிடுகிறார், நான் போக மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே சண்முகம் அறையின் கதவை மூடி பரத்திடம் வந்து சொன்னாராம் ‘அண்ணன் ஒரு பொன் முட்டையிடுகிற வாத்து, அவர் போடுகிற முட்டையை வைத்து தான் 40 பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், சினிமாவிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது, என்னால இதுக்கு மேல முடியாது, என்னை விட்டுருங்கடா என்று சொல்லியும் நாங்க சொல்றதுனால தான் நடிக்கிறாரு, ஏன்னா அவர நம்பி இங்கே பல குடும்பங்கள் இருக்கின்றன, அதனால் தான் அந்த அசதியில அவர் தூங்குகிறார், ஆனால் கதை சொல்வதை விஷுவலா மெய்மறந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாரு’ என்று சண்முகம் சொன்னதும் பரத்திற்கு கண்கள் கலங்கி விட்டதாம். அதன் பிறகே ஸ்கிரீன்ப்ளே சொல்ல போனாராம்.

bharath