அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க மாட்டேன்..இயக்குனரை கோர்த்து விட்டு எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன்...
தான் இதுவரை ரீமேக் படங்களே நடித்தது இல்லை என்றும், ப்ரேமம், அல வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட படங்களின் ரீமேக்கில் என்னை கேட்ட போதும் தான் மறுத்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்து இருப்பது வைரலாக பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவிற்குள் மெரினா படம் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தமிழ் சினிமா இவரை நடிகராக அங்கீகரித்து கொண்டது. தொடர்ச்சியாக பல வாய்ப்புகள் குவிய தற்போது கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. ஆனால் ப்ரின்ஸ் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பினை பெறவில்லை. இந்நிலையில், நான் ரீமேக் படங்களில் நடிக்கவே மாட்டேன். அதற்கு காரணம் எனது பயம் தான். ஓடிடி அதிகரித்து இருக்கும் இந்த காலத்தில் அப்படத்தின் ஒரிஜினலை ரசிகர்கள் பார்த்து விடுகிறார்கள். அதனால் நாம் தவறாக நடித்தால் படம் மோசமாகி விடும்.
எனக்கு தமிழில் ப்ரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்கு அதில் நடிக்க விருப்பம் இல்லை. தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்தனர். சரி ப்ரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனே இயக்கினால் நடிப்பேன் எனக் கூறினேன். உடனே இயக்குனர் எனக்கு போன் கால் செய்தார். ப்ரதர் நானே தமிழ் படங்களின் காதல் காட்சிகளை பார்த்து அதில் ரசித்த விஷயங்களை தான் படமாக்கி இருக்கிறேன். தமிழ் பட காதல் காட்சிகள் செய்யும் மேஜிக்கை என் பாணியில் தான் உருவாக்கினேன். மலையாளத்தில் செய்ததை மீண்டும் தமிழில் ரீமேக் என்ற பெயரில் உருவாக்க என்னால் இயலாது என்றார்.
உடனே சிவகார்த்திகேயன் இதே பதிலை அவர்களிடமும் கூறிவிடுங்கள். எனக்கும் இதில் விருப்பம் இல்லை சார் என்றாராம். அது மட்டுமல்லாமல் இந்தி பட ரீமேக், அல்லு அர்ஜூனின் அல வைகுந்தபுரமுலோ பட ரீமேக்கையும் நோ சொன்னாராம் சிவகார்த்திகேயன்.