இதுவரை ஓடிடியில் தலைகாட்டாத ‘லால் சலாம்’! லைக்காவுக்கு இப்படி ஒரு செக்க வச்சிட்டாங்களா
Lal Salaam Movie: லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் லால் சலாம். இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வெளியானது. படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
அவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருப்பார். படம் வெளியாவதற்கு முன் பெருமளவு எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் ரிலீஸான பிறகு கலவையான விமர்சனத்தையே பெற்றது. வசூலிலும் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: எலேய் இருங்கப்பா… யாரு இதுல ஹீரோ, ஹீரோயின்… முத்து, மீனாவா? ஸ்ருதி, ரவியா? குழப்பமா இருக்கே!
இதற்கிடையில் 20 நாள் ஃபுட்டேஜ் காணாமல் போனதாகவும் அதனாலேயே படம் இந்தளவுக்கு மாறியது எனவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடும் விமர்சனத்திற்கு பிறகு இதுதான் காரணம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் படம் ரிலீஸாகி சில மாதங்களை கடந்த நிலையிலும் இன்னும் ஓடிடியில் லால் சலாம் படம் வெளியாகவே இல்லை. அதற்கான காரணம் ‘படத்தின் 21 நாள் ஃபுட்டேஜ் காணாமல் போனதாம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது உரிமையை ரத்து செய்ததாகவும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற முயற்சித்து வருகிறது’ என்றும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவலாக போய்க் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: நல்லா ஊத்துக்குளி வெண்ண போல இருக்க!. விஸ்வாசம் நடிகைக்கு குவியும் லைக்ஸ்!…
இதை பற்றி சித்ரா லட்சுமணனிடம் கேட்டபோது இவ்வளவு நாள் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கிறது என்றால் இதுதான் காரணமாகக் கூட இருக்கலாம் என பதிலளித்திருந்தார். இப்படி ஒரு பிரச்சினை இருப்பதனால்தான் நெட்ஃபிளிக்ஸ் அதனுடைய உரிமையை ரத்து செய்திருக்கிறதாம்.