நடிகருடன் கோர்த்து விட்டு பேசியப்போ அமைதியோ அமைதி!.. இதுக்கு மட்டும் காஞ்சனாவா மாறுறாரே அந்த நடிகை... ஏன்?

பிரபல நடிகருடன் வெளிநாட்டில் ராணி நடிகை லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஏகப்பட்ட வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கெல்லாம் அமைதியோ அமைதி என அமைதி காத்து வந்த அந்த நடிகை தற்போது திடீரென இந்த விஷயத்துக்கு மட்டும் காஞ்சனாவாக மாறி இருப்பது ஏன் என்கிற கேள்வியை சினிமா வட்டாரத்தில் சிலர் எழுப்பி உள்ளனர்.
முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த ராணி நடிகை தொடர்ந்து வெளிநாட்டில் சுற்றுலா செய்து வந்த நிலையில் அவர் குறித்து ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி சில சினிமா பிரபலங்கள் வரைப் பேசும் அளவுக்கு விவாதப் பொருளானது.
இதையும் படிங்க: தத்தெடுப்பதில் இவ்ளோ சிக்கல் இருக்கா?.. ஆர் யூ ஓகே பேபி படம் எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..
பிரபல நடிகர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து விட்டு தற்போது ராணி நடிகை உடன் தான் குடித்தனம் நடத்தி வருகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின. அந்த வதந்திக்கு எல்லாம் நடிகை வாய் திறக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென வந்த திருமண வதந்திக்கு இந்த அளவுக்கு ரியாக்ட் செய்துள்ளரே நடிகை என்ன காரணம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
டாப் நடிகர்கள் தொடர்ந்து திருமணமான நடிகைகளை தங்கள் படங்களில் இருந்து தூக்கி வருவது தான் இதற்குக் காரணம் என்றும் தற்போது ஷாக்கிங் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: இறைவன் படக்குழுவிற்கு வந்த அதிர்ச்சி நியூஸ்!… என்னங்க ஜெயம் ரவி இப்படி ஆகிட்டு?
அந்த பயம் காரணமாகத்தான், தனக்கு கிடைத்து வரும் சினிமா வாய்ப்புகள் கையை விட்டு வேறு நடிகைகளிடம் சென்று விடுமோ என்கிற பயத்தால் தான் நடிகை அதிரடியாக அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்றும் கூறுகின்றனர்.
நடிகைகள் மீது அட்ஜெஸ்ட்மென்ட் பேச்சுக்கள் எழுந்தாலும் அசால்ட்டாக இருக்கும் நடிகைகள் திருமண பேச்சு வந்தால் உடனடியாக ஆஜராக காரணமே அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடுவதால் தான் என்கின்றனர்.