இது திருப்புனா வண்டி எப்படி ஓடும்... சுந்தர்.சி பெயருக்கு இதான் காரணமாம்...

by Akhilan |   ( Updated:2022-11-01 06:25:05  )
சுந்தர். சி
X

sundar c

தமிழ் சினிமாவின் ஹிட் படங்களை கொடுத்த சுந்தர்.சி தனது பெயரை இப்படி போடுவதன் காரணத்தை சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.

முறை மாமன் திரைப்படம் மூலமாக சுந்தர் சி. தமிழில் இயக்குனராக அறிமுகமானார். படம் நல்ல ஹிட்டை கொடுத்த நிலையில், இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்தன. அதன்பின் இவரின் இயக்கத்தில் ரஜினிகாந்தின் அருணாச்சலம், கமல்ஹாசனுடைய அன்பே சிவம் மிகப்பெரிய வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர்.சி

சுந்தர்.சி

தொடர்ச்சியாக சீரியஸ் படங்களை விடுத்து காமெடி படங்களுக்கு தன் ரூட்டை திருப்பினார். அதுவும் சுந்தர்.சிக்கு சரியாகவே அமைந்தது. வின்னர், கலகலப்பு உள்ளிட்ட படங்களும் வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில், சுந்தர். சி தனது பெயரின் இன்ஷியலை ஏன் பின்னாடியே போடுகிறார் என்ற சுவாரஸ்ய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு சுந்தர் மற்றும் சியினை சேர்த்தே போட்டேன். இதை பார்த்த என் நண்பர்கள் சுராஜ், பிரபு சாலமன் எல்லாம் என்னுடைய முதல் படமான முறை மாமனில் சுந்தர்.சி என்றே போட்டு விட்டனர்.

சுந்தர்.சி

உள்ளத்தை அள்ளித்தா

நான் அவர்களிடம் என்னப்பா சி.சுந்தர் தானே வரணும். இப்படி வருதே எனக் கேட்டேன். ஆனால் படம் ரிலீஸுக்கு தயாராக இருந்ததால் மாற்ற முடியாமல் படம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆகிவிட்டது. அடுத்த படமான முறை மாப்பிள்ளை படத்தில் சி.சுந்தர் என்று போட்டனர். படம் ப்ளாப் ஆனது. மூன்றாவது படமான உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மீண்டும் சுந்தர்.சி என்றே போட்டோம். படம் ஹிட் ஆனது. இதனை சென்டிமெண்ட்டாக கருதி அப்படியே என் பெயரை மாற்றியே போட்டுவிட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

Next Story