அடம்பிடித்து தொங்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்!.. விஜயை வைத்து 100 வது படத்தை தயாரிப்பதற்கான பின்னனி காரணம்..

Published on: May 10, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் விஜய். எம்ஜிஆர், ரஜினிக்கு அடுத்தபடியாக மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகராக தொடர்ந்து இருந்து வருகிறார் விஜய். தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பாகவும் பல நல்ல உதவிகளை செய்து மக்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்து வருகிறார். விஜயின் ஒவ்வொரு படங்களின் ரிலீஸ் சிலும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆர்ப்பரிக்கும் அளவே இருந்து வருகின்றன.

vijay1
vijay1

அந்த அளவுக்கு விஜயின் மீது ரசிகர்கள் தன் உயிரையே வைத்து தங்களுடைய அன்பை காட்டி வருகின்றனர். விஜய் வைத்து படம் தயாரிக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் போட்டி போட்டு வரும் நிலையில் தன்னுடைய நூறாவது படத்தை விஜயை வைத்து தான் தயாரிக்க வேண்டும் என்று சூப்பர் குட் டபிலிம்ஸ் நிறுவனம் நினைத்திருக்கிறது.

கிட்டத்தட்ட விஜயை வைத்து ஐந்து படங்களுக்கு மேல் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் விஜயின் கரியரில் மிகவும் முக்கியமான படங்களாக அமைந்த படங்களை தயாரித்து இருக்கிறது. பூவே உனக்காக, ஜில்லா, திருப்பாச்சி, லவ் டுடே போன்ற பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை தயாரித்து விஜய்க்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

vijay2
vijay2

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களையும் தயாரித்து வரும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது நூறாவது படத்தை விஜயை வைத்து மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறது. அதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

விஜயின் மீது இயல்பாகவே தனிப்பட்ட அக்கறை கொண்ட அந்த நிறுவனத்தின் தலைவரான ஆர் பி சவுத்ரி விஜயை வைத்து தயாரித்த முதல் படத்தில் அதாவது பூவே உனக்காக என்ற படத்தின் கதையை வசந்திடம் சொல்லி இருக்கிறார். ஆனால் வசந்துக்கு அந்த கதை பிடிக்கவே இல்லையாம். அதன் பிறகு ஆர்பி சௌத்ரியின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அந்த படத்தை இயக்கியிருக்கிறார் வசந்த். அதில் விஜயை நடிப்பை பார்த்து மிரண்டே போய்விட்டாராம் வசந்த்.

vijay3
vijay3

அதேபோல ஜில்லா படத்தின் பூஜை சமயத்திலும் பட பூஜையை மிக எளிதாகவே நடத்தி இருக்கிறார் ஆர்பி சவுத்ரி .ஆனால் இதைத் தெரிந்த விஜய் ஆர் பி சவுதிரி அழைக்காமல் இருந்த போதும் அவருக்காக வந்து பூஜையில் கலந்து கொண்டாராம். ஏனெனில் அந்த சமயம் விஜய் பிக்கில் இருந்ததினால் பெரும் கூட்டம் ஏற்படும் ,அதனால் சில தொந்தரவுகள் ஏற்படலாம் என நிறுவனமே அந்த பூஜையை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. ஆனாலும் விஜய் ஆர்பி சவுத்ரியின் மீது உள்ள அன்பின் காரணமாக அந்த பூஜையில் வந்து கலந்து கொண்டாராம். இந்த ஒரு நெருக்கம் அக்கறை அன்பு இதன் காரணமாகவே விஜயை வைத்து தனது நிறுவனம் சார்பாக நூறாவது படத்தை தயாரிக்கிறதாம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.