4 கோடி போனா போகட்டும்!.. ஆனா அமீருக்கு கொடுக்க மாட்டேன்!.. சூர்யா செய்வது சரியா?...
பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் செலவு செய்த 1.65 கோடியை அவருக்கு சிவக்குமார் குடும்பமோ இல்லை அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவோ அவருக்க கொடுக்கவில்லை என்பதுதான் அமீரின் புகார். ஏனெனில் படத்தை ஞானவேல் ராஜா பாதியிலேயே விட்டுவிட்டு போன நிலையில் மீது படத்தை தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி எடுத்தார் அமீர்.
ஆனால், படம் முடிந்தபின் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக பருத்தி வீரன் படத்தை ஞானவேல் ராஜா பெயருக்கு எழுதி வாங்கினார்கள். படம் ஓடினால் அமீர் செலவு செய்த பணத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால், ஞானவேல் ராஜா அதை செய்யவில்லை. இதுவரை அந்த பணத்தை அவர் அமீருக்கு கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: பிரேம்ஜி கல்யாணத்துக்கு வந்த சிக்கல்.. இப்படி சைலாண்ட்டா இருந்தா எப்படி?!.. சீக்கிரம் சொல்லுங்கப்பா!..
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல ஊடகங்களிலும் அமீர் இதுபற்றி பேச சமூகவலைத்தளங்களில் இந்த விஷயம் அதிகமாக விவாதிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தில் நடித்த கார்த்தியும் சரி, அவரின் அண்ணன் சூர்யாவும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சூர்யாவுக்கும் சரி. கார்த்திக்கும் சரி 1.65 கோடி என்பது சுலபமாக கொடுத்துவிடக்கூடிய பணம்தான். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை.
ஒருபக்கம், பாலாவை வைத்து வணங்கான் படத்தை துவங்கியதில் சூர்யாவுக்கு 4 கோடிக்கு மேல் நஷ்டம் என சொல்லப்படுகிறது. அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா விலகிவிட இப்போது அருண்விஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எம்மா இப்போ உங்களுக்கு வெட்கமே இல்லையா? ‘லால் சலாம்’ பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்
4 கோடியை கண்டுகொள்ளாத சூர்யா அமீருக்கு பணம் கொடுத்திருக்கலாமே என்பதுதான் பலரின் கேள்வியும். விஷயம் தெரிந்த சினிமா பத்திரிக்கையாளர்கள் சொல்வது என்னவெனில் ‘சூர்யாவுக்கு பணம் பிரச்சனை இல்லை. ஈகோதான் பிரச்சனை. அமீர் மீது ஏதோ மனக்கசப்பில் சிவக்குமார் குடும்பம் இருக்கிறார்கள். அதனால் இப்படி நடந்து கொள்கிறார்கள்’ என சொல்கிறார்கள்.
இந்த பணத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த 17 வருடங்களாக அலைந்து வருகிறார் அமீர். சூர்யாவை மௌனம் பேசியதே படம் மூலம் ஒரு முழு ஹீரோவாக மாற்றியது அமீர்தான். நந்தா படத்தில் அவருக்கு எப்படி நடிப்பது என சொல்லி கொடுத்ததும் அமீர்தான். அவரின் தம்பி கார்த்தியை பருத்தி வீரன் படம் மூலம் அறிமுகம் செய்து வைத்ததும் அவர்தான். ஆனால், அவரிடம் ஏன் இப்படி சிவக்குமார் குடும்பம் நடந்துகொள்கிறது என்பதுதான் பலருக்கும் புரியாத கேள்வியாக இருக்கிறது.
இதையும் படிங்க: இதுக்கு பேரு புரமோஷனா?!.. பச்சோந்தி வேஷம் போடாதீங்க!.. சந்தானத்தை பொளக்கும் பிரபலம்..