T.Rajendran: தமிழ் சினிமாவில் எத்தனையோ பெரிய ஆளுமைகளை நாம் பார்த்திருக்கிறோம். அதில் மிகச் சிலரை மட்டும் நாம் எக்காலத்திற்கும் மறைக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு நபர்தான் பிரபல இயக்குனரும் நடிகரும் பாடகருமான டி ராஜேந்திரன். பன்முகத் திறமைகளை தன்னகத்தே கொண்டு இந்த தமிழ் சினிமாவை 80களில் கட்டி ஆண்டவர் டி ராஜேந்திரன். தனக்குள் இருக்கும் பல்வேறு வகையான திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் நெஞ்சங்களில் குடியேறியவர் ராஜேந்திரன்.
நடிகர். நடன கலைஞர். பின்னணி பாடகர். திரைக்கதை எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். பல வெற்றி படங்களை இந்த தமிழ் சினிமாவிற்காக கொடுத்தவர். ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். அதேபோல குணச்சித்திர நடிப்பிலும் இவரை விட சிறந்த நடிகர் யாருமில்லை என்று சொல்லலாம். இவர் முதல் முதலில் ஒரு தலை ராகம் என்ற படத்தில் அறிமுகம் ஆகி அந்தப் படம் மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: தூக்கலான கிளாமரில் நடிகைங்களுக்கு டஃப் கொடுக்கும் பிரியா அட்லி!.. சினிமாவுல நடிக்க போறீங்களா?!..
அதிலிருந்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது .குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இவர் தனது படங்களில் புது முகங்களை அறிமுகப்படுத்துவதையே விரும்புவார் .அதில் நளினி, அமலா ,ஜோதி ,ஜீவிதா மற்றும் மும்தாஜ் போன்ற நடிகைகளை அறிமுகப்படுத்தியது டி ராஜேந்திரன் தான்.
இந்த நிலையில் ரஜினி கமலை இயக்கக்கூடிய வாய்ப்பு டி ராஜேந்திரனுக்கு ஏன் கிடைக்கவே இல்லை என்ற ஒரு கேள்வி சித்ரா லட்சுமணனிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சித்திரா லட்சுமணன் ரஜினி கமலை இயக்கக்கூடிய வாய்ப்பு டி ராஜேந்திரனுக்கு கிடைக்கவில்லை என்றால் ஒரு காலத்தில் டி ராஜேந்திரன் ஹீரோவாக நடித்தது கூட இருக்கலாம். இது அவர் சொன்ன கருத்து இல்லை.
இதையும் படிங்க: ‘கூலி’ படத்திற்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம்! என்னப்பா சொல்றீங்க? அதுவும் LCUவா?
டி ராஜேந்திரனை பொருத்தவரைக்கும் ரஜினியும் கமலும் ஒரு மாபெரும் நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருந்தனர். அவர்களை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு என்னுடைய படங்கள் அந்த அளவு பிரம்மாண்டம் கிடையாது. சாலையோரங்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களுக்கு சமமானது என்னுடைய படங்கள். அதனாலேயே அவர்கள் இருவரை வைத்து படம் எடுக்கவில்லை என ஒரு கட்டுரையில் டி ராஜேந்திரனே ஒரு சமயம் கூறியதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…