நடிகருடன் லிவிங் டூகெதர்?!. திருமணம் நின்ன காரணம் இதுதானா?
கோலிவுட்டில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கனவு கன்னியாக தற்போது வரை ஒரு மாஸ் ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தவர் அதன் பின் மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் ஒரு நட்சத்திரமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அந்தப் படத்தில் நடித்ததன் விளைவாக அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு நல்ல வரவேற்பை பெற்றார் திரிஷா. விஜய் அஜித் ஆகியோருடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு முன்னணி ஹீரோயின் ஆகவே வலம் வந்தார். நடிகைகளுக்கு பொதுவாக வயதாகி விட்டாலே அம்மா கதாபாத்திரம் அக்கா கதாபாத்திரம் என தன்னுடைய போக்கையே மாற்றிக் கொள்வது இந்த சினிமா உலகம்.
ஆனால் 40 வயது ஆகியும் இன்னும் ஒரு குந்தவையாக ஜெஸியாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு ஆட்சி செய்து கொண்டு வருகிறார் திரிஷா. இந்த நிலையில் நடிகை திரிஷாவின் திருமண நிச்சயதார்த்தத்தை பற்றிய ஒரு செய்தி தற்போது வைரலாகி வருகின்றது. வயதாகியும் இன்னும் த்ரிஷாவிற்கு திருமணம் செய்து வைக்கவில்லையே ?அவரை வைத்து அவருடைய அம்மா பணம் சம்பாதிக்கிறார் என்று அப்போதைய ஊடகங்களில் பல செய்திகள் வரத் தொடங்கியது.
இதனால் கடும் கோபம் கொண்ட அவருடைய அம்மா திடீரென ஒரு பத்திரிக்கை கூட்டம் நடத்தி அதில், தான் அந்த மாதிரி இல்லை என்பதை ஒரு வாக்குவாதமாகவே மாற்றி அதில் இருந்து பிரபல தொழிலதிபர் ஒருவரை த்ரிஷாவிற்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்தார். அவர் சொன்ன மாதிரியே பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை த்ரிஷாவிற்கு திருமணம் பேசி நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த நிச்சயதார்த்தம் பாதியிலேயே நின்று போனது .அதற்கு காரணம் பெரியோர்களாகிய நாங்கள் தான் என்றும் பத்திரிகைகளில் பேட்டியளித்தார்கள் இருவரின் குடும்பத்தார்களும்.
திரிஷாவின் திருமண நிச்சயதார்த்தம் நின்று போனதை அடுத்து அவருக்கு சில காலம் படங்களின் வாய்ப்பு இல்லாமல் இருந்தன. அந்த நேரத்தில் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக செய்தி வெளியானது. மேலும் தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் ஒரு சில படங்களில் திரிஷாவிற்கு நடிக்க வாய்ப்பு வந்தது .அந்த ஒரு நடிகருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது வெளியே தெரிய வர தெலுங்கு சினிமாவே த்ரிஷாவை இனி இங்கு அவர் நடிக்க வரக்கூடாது என அவரை விரட்டி அடித்தது.
அதுமட்டுமில்லாமல் கன்னட சினிமா உலகமும் திரிஷாவை விரட்டி அடித்தது. ஆனாலும் தன்னுடைய திறமையால் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார் திரிஷா. இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார்.