இதுலயும் அரசியலா?.. உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் ரிலீஸாவதில் நீடிக்கும் தாமதம்?..

by Rohini |
uthaya
X

uthayanithi

இன்று அரசியலில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் தமிழகத்தின் வாரிசான உதயநிதி ஸ்டாலின். மேடைகளில் பேசுவதையே கூச்சமாக எண்ணி இன்று பல மேடைகளில் நக்கல் நயாண்டிகளை அள்ளி வீசி தெளித்து வருகிறார். உதயநிதி பேச்சுக்கு பல கோடி பேர் ரசிகர்களாக மாறியுள்ளனர்.

அதுவும் அமைச்சர் ஆனதில் இருந்து அரசியலில் முழுவதுமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். டெல்லி வரை சென்று பிரதமரை சந்தித்த அவர் ஈரோடு பிரச்சாரத்திலும் புயல் மாதிரி சுற்றி வந்தார். இதற்கிடையில் சினிமாவிற்கு முழுக்குப் போட்டவர் எப்போது அமைச்சரானாரோ அப்பவே கமலுடன் பணியாற்ற இருந்த படத்தை ரத்து செய்து விட்டார்.

uthaya1

uthayanithi

மேலும் இனிமேல் தான் நடிக்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் ஏற்கெனவே மாரிசெல்வராஜ் இயக்கிய ‘ மாமன்னன்’ படம் இன்னும் பாதியிலேயே இருக்கின்றது. படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் டப்பிங் வேலைகளும் ரீ ரிக்கார்டிங் வேலைகளும் இருக்கின்றதாம்.

இதில் டப்பிங் வேலைகள் முடிந்து விட்டால் படம் தகுந்த நேரத்தில் வெளியாகி விடும். ஆனால் ஒரு 10 நாள் கால்ஷீட் கொடுத்து டப்பிங் வேலைகளை உதயநிதி வந்து முடிக்கக் கூடாதா என்று கூறிவருகின்ற zனர். அவர் ஏன் இந்த தாமதம் படுத்துகிறார் என்று விசாரித்தால் சில சுவாரஸ்ய சம்பவங்கள் வெளியாகின.

uthaya2

uthayanithi

மாரிசெல்வராஜ் படம் என்றால் கண்டிப்பாக அரசியல் கருத்துக்கள் சார்ந்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த வருடம் தேர்தலை சந்திக்க உள்ள உதயநிதி அந்த நேரத்தில் படம் வெளிவந்தால் மக்களிடம் ஓட்டு கேட்க எளிதாக இருக்கும் என்று கருதுகிறாரோ என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க :கங்கை அமரனிடம் இந்த அளவுக்கு நெருக்கமா?.. பொறாமை படும் அளவுக்கு நடந்து கொண்ட சில்க்..

எப்படியும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் என்றால் அது நல்ல விதத்தில் தான் மக்களை சென்றடையும் மாதிரியான காட்சிகளை வைத்திருப்பார் மாரி செல்வராஜ். அதனால் அது இன்னும் உதயநிதிக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். என்ன ஒரு அரசியல் சமாச்சாரம் பாருங்க!.

Next Story