ஒருத்தருக்கும் ஒத்த பைசா கொடுக்காத வடிவேலு வெங்கல் ராவுக்கு கொடுக்க காரணம்!.. சீக்ரெட் சொன்ன நடிகர்..

by Rohini |   ( Updated:2024-07-02 21:01:23  )
vadi
X

vadi

Vadivelu: தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் ஒரு துணை காமெடி நடிகராக கலக்கியவர் நடிகர் வெங்கல் ராவ். சமீபத்தில் இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் பேசக்கூட முடியாமல் தனக்கு யாரேனும் உதவி செய்யுங்கள் என கூறிய வீடியோ வைரலானது.

அதை பார்த்த ஒரு சில பிரபலங்கள் அவருக்கு பண உதவி செய்து தங்களுடைய ஆதரவுகளையும் தெரிவித்தனர். அதில் நடிகர் சிம்பு முதல் ஆளாக இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து இருந்தார். அதன் பிறகு அடுத்தடுத்து கே பி ஒய் பாலா ஒரு லட்சமும் வடிவேலு ஒரு லட்சமும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்கள்.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு இதனால் தான் திமிரு அதிகமாகிடுச்சு!.. இயக்குனர்களின் சாபங்களை வாங்கிக் கட்டிக்கிறாரு!

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெங்கல்ராவும் ஒரு வீடியோவை வெளியிட்டு தனக்கு உதவி செய்த பிரபலங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்தார். அதோடு, இன்னும் ஒரு சில நடிகர்கள் நடிகைகள் தனக்கு உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் வடிவேலுவுக்கும் வெங்கல்ராவுக்கும் இருந்த நெருக்கத்தைப் பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். வடிவேலுவை வெங்கல்ராவுக்கு மிகவும் பிடிக்குமாம்.வடிவேலு இருக்கும் அலுவலகத்திற்கு அடிக்கடி போவாராம் வெங்கல் ராவ்.

vengal rao

வடிவேல் இல்லாவிட்டாலும் நாள்தோறும் அவருடைய அலுவலகத்திற்கு சென்று பார்த்துவிட்டு தான் வருவாராம். அதனாலையே வடிவேலுக்கு வெங்கல் ராவை மிகவும் பிடிக்குமாம். அதன்காரணமாக கூட ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கலாம் என பாவா லட்சுமணன் கூறினார்.

அதற்கு ஏற்ப தன்னுடன் நடித்த எந்த ஒரு சக நடிகர்களுக்கும் கொடுக்காத ஒரு அங்கீகாரத்தை வெங்கல்ராவுக்கு கொடுத்திருந்தார் வடிவேலு. நீண்ட வருடத்திற்கு பிறகு ரி என்ட்ரி கொடுத்த படமாக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் அமைந்தது. அதில் வெங்கல்ராவுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து அந்த படத்தில் நடிக்க வைத்திருந்தார் வடிவேலு. இதிலிருந்து தெரிகிறது வடிவேலு எந்த அளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் என்று.

Next Story