Connect with us

வாணி போஜனை எதுக்குங்க தூக்குனீங்க.!? ரசிகர்கள் குமுறல்.! இயக்குனரின் அதிரடி பதில்.!

Cinema News

வாணி போஜனை எதுக்குங்க தூக்குனீங்க.!? ரசிகர்கள் குமுறல்.! இயக்குனரின் அதிரடி பதில்.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் மகான். இத்திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் சியான் விக்ரம் , துருவ் விக்ரம் , பாபி சிம்ஹா என அனைவரது நடிப்பும் சிறப்பாக இருந்தது.

இந்த திரைப்படம் ஆரம்பிக்கும் போதே இந்த திரைப்பட கதாபாத்திரங்கள் பற்றி இன்ட்ரோ போஸ்டர் மூலமாக கொடுக்கப்பட்டது.

 

இதையும் படியுங்களேன் –90’s கிட்ஸ் கவனத்திற்கு.! சக்திமானாக நடிக்க உங்களுக்கு விருப்பமா?! கெஞ்சும் பட நிறுவனம்.!

அதில் நடிகை வாணி போஜன் கதாபாத்திரமும் அடங்கும். ஆனால், ஒரு காட்சியில் கூட வாணி போஜன் வரவில்லை. இதனால், வாணி போஜனை எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாந்துதான் போனார்கள்.

இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், முதலில், சிம்ரனை பிரிந்து வந்த விக்ரம் வாணி போஜனுடன் வாழ்வது போல கதை எழுதி அதனை பாதி படமாகிவிட்டோம். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் ஷூட்டிங் இடைவெளி, என சில சூழ்நிலைகள் காரணமாக அவர்களது காட்சிகளை தொடர முடியவில்லை.

அதானல் வாணி போஜன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் நீக்கிவிட்டு விக்ரம் கடைசி வரை தனியே வசிப்பது போல படமாக்கிவிட்டோம் என தெரிவித்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top