விஜய் அந்த இயக்குனரை ஓடவிட்டதற்கு இதுதான் முக்கிய காரணமா.?! அவருக்கு இது தேவைதான்.!
தளபதி விஜய் தன்னுடைய சினிமா பாணியை துப்பாக்கி படத்திற்கு முன், அதற்கு பின் என இரண்டாக பிரித்து விட்டார் என்றே கூறலாம். அந்தளவுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி படத்தில் விஜயை செதுக்கி வைத்து இருப்பார். துப்பாக்கி படத்திற்கு பின்னர் விஜயின் கதை தேர்வு வேறு மாதிரி மாறிவிட்டது என்பது அவரது அடுத்தடுத்த படங்களை பார்த்தாலே நமக்கு புரிந்து விடும்.
அதனால் தான் முருகதாஸுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்தார் விஜய். துப்பாக்கியை தொடர்ந்து கத்தி திரைப்பட வாய்ப்பை கொடுத்தார் விஜய். அதில் கதை பிரச்னை வந்தாலும், விஜய் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றே கூறலாம். ஏனென்றால் துப்பாக்கி கொடுத்த பெரிய வெற்றி தான்.
அதன் பிறகும் சர்கார் வாய்ப்பை முருகதாசிற்கு கொடுத்தார் விஜய் . அதில் தான் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. கத்தி படத்தில் கொஞ்சம் இலகுவாக இருந்த கதை திருட்டு பிரச்சனை சர்காரில் நீதிமன்றம் , பஞ்சாயத்து, நஷ்டஈடு வரை சென்றது. அதனால் விஜய் மிகவும் கடுப்பாகிவிட்டார் என்றே கூறலாம்.
இதையும் படியுங்களேன் - வலிமையில் ஆர்வமில்லாத வினோத்.! கரை சேருவாரா போனி கபூர்.! பகீர் பின்னணி தகவல்கள்.?!
இதனை அடுத்து நான்காவது முறையும் முருகதாஸ் விஜயை அணுகினார். இந்த முறை விஜய் சுதாரித்துக்கொண்டு, முழு கதையையும் கேட்டுள்ளார். அப்போது அவர் கூறிய கதையில் இரண்டாம் பாதியில் சில பஞ்சயாத்து எழ கூடும் என்பதை முன்பே உணர்ந்த விஜய் நாசுக்காக அதிலிருந்து வெளியேறியதாக கூறப்பட்டது.
தனக்கு அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனராக இருந்தாலும் இந்த முறை வேண்டாம் என முருகதாஸை கழட்டிவிட்டார் விஜய். முருகதாஸ் பற்றி விவரம் அறிந்தவர்கள் அவருக்கு வாய்ப்புகள் தராததால் , தற்போது அவர் குரங்கை வைத்து புதிய படத்தை எடுக்க முயற்சித்து வருகிறார்.