விஜய் ஆக்ஷன் படங்களில் மட்டும் நடிக்க காரணம் அந்த சம்பவம்தான்!.. இது தெரியாம போச்சே!...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது லியோ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் விஜய் ஒரு வசூல் சக்கரவர்த்தியாகவே வலம் வருகிறார்.
ஆரம்பத்தில் சினிமா பயணம் என்பது விஜய்க்கு ஒரு சவாலாகவே இருந்து வந்தது. ஏகப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகள் என விஜயை சூழ்ந்து வந்தது. இருந்தாலும் அதை பற்றி எதையும் கவலை கொள்ளாமல் தன்னுடைய கடின உழைப்பால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார் விஜய்.
கமெர்சியல் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களை கவர்ந்து வந்த விஜய் பகவதி படத்தின் மூலம் ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்தார். அதில் இருந்து தொடர்ந்து ஆக்ஷன் சம்பந்தமான படங்களிலேயே நடித்து ரசிகர்கள் கொண்டாடும் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்தார்.
அவருக்கு ஆக்ஷன் படங்களில் இந்த அளவுக்கு ஆசை வந்ததுக்கு காரணமாக பின்னனியில் நடந்த ஒரு சம்பவம் பற்றிய செய்திதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய்க்கு சிறுவயதில் இருந்தே காக்கி சட்டை மீது அலாதி பிரியம் உண்டாம்.
அவரின் பெற்றோரிடம் அடிக்கடி காக்கி சட்டை வேண்டும் என அடம்பிடிப்பாராம். ஒரு சமயம் ஷோபனா இளையராஜாவின் கச்சேரிக்காக மலேசியா செல்ல இருந்ததாம். கூடவே அவரது அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரும் சென்றாராம். ஆனால் விஜய் நம்மையும் சேர்த்து அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்க விமான நிலையத்தில் டாடா காட்டி சென்று விட்டனராம்.
இதையும் படிங்க : மணிரத்னத்திற்கு டேக்கா கொடுக்கும் கமல்!… அஜித் பட இயக்குனருக்குத்தான் அடுத்த படம்… ஏன் இப்படி?
அதன் பின் அவரை சமாதானம் செய்ய மலேசியாவில் இருந்து அவரது பெற்றோர்கள் காக்கிச்சட்டையை வாங்கி வந்து விஜயிடம் கொடுத்தார்களாம். அவர் அதை போட்டுக் கொண்டு அப்பவே கம்பீரமாக போஸ் கொடுத்து பல வித்தைகள் செய்தாராம். இதுவே அவர் ஆக்ஷன் படங்களில் நடிக்க தூண்டுகோலாக இருந்திருக்கலாம் என அந்த செய்தியில் கூறப்பட்டது.