அஜித்துடன் இருந்த மனவருத்தம்?.. வெங்கட் பிரபுவை விஜய் ஓகே பண்ண இதான் காரணமா?

Published on: May 23, 2023
prabhu
---Advertisement---

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் இடையே இருக்கும் தொழில் முனை போட்டிகள் அவரது ரசிகர்கள் மூலமாகவே நாம் நாள்தோறும் பார்த்துக் கொண்டு வருகிறோம். சமூக ஊடகங்களில் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

prabhu1
prabhu1

சமீப காலமாக இருவருக்கும் இடையே கடும் போட்டிகள் நிலவி வருகின்றது. அப்படி இருக்கையில் ஒரே ஸ்கிரீனில் எப்போது இருவரையும் ஒன்றாக பார்க்கப் போகிறோம் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .அதுவும் அந்த ஒரு கேள்வியை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் மட்டுமே கேட்டு வந்தனர்.

அதற்குக் காரணம் மங்காத்தா படப்பிடிப்பு சமயத்தில் வெங்கட் பிரபு அஜித் விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதன் மூலமாகவே. இருவரும் சம்மதித்தால் ஒரே ஸ்கிரீனில் காட்டத் தயார் என வெங்கட் பிரபு அந்த நேரத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்போது ஆரம்பித்த இந்த கேள்வி இப்போது வரை வெங்கட் பிரபுவிடம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

prabhu2
prabhu2

இந்த நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருக்கின்றன. அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் வலைப்பேச்சு பேச்சாளருமான அந்தணன் வெங்கட் பிரபுவை விஜய் எப்படி ஓகே செய்தார் என்பதை தனது பேட்டியின் மூலம் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது விஜய், நடிப்பில் ஒரு பக்கம் ஆர்வம் காட்டி வந்தாலும் அரசியலிலும் தனது ஈடுபாட்டை அவ்வப்போது காட்டி வருகிறார் .இப்போது இருக்கும் சூழ்நிலையில் இளம் இயக்குனர்கள் மத்தியில் வெங்கட் பிரபுவால் மட்டுமே அரசியல் சார்ந்த படங்களை கொடுக்க முடியும் என மாநாடு படத்தின் மூலம் விஜய் நினைத்திருக்கலாம். அதனாலயே வெங்கட் பிரபுவை ஓகே செய்திருப்பார் என அந்தனன் கூறியிருக்கிறார்.

prabhu3
prabhu3

ஏனெனில் மாநாடு படம் ஒரு அரசியல் சார்ந்த படமாக அமைந்ததால் அந்த மொத்த கிரெடிட்டும் வெங்கட் பிரபுவை மட்டுமே சேரும். அதனாலேயே தளபதி 68 படம் ஒரு அரசியல் பின்னணியில் அமைந்த படமாக இருக்கலாம் என கூறுகிறார். இது மட்டும் இல்லாமல் வெங்கட் பிரபு மீது அஜித் ஒரு சிறிய மன வருத்தத்திலும் இருக்கிறார் என்றும் அந்த அண்ணன் கூறினார் .ஏனெனில் சில தினங்களுக்கு முன்பு அஜித்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெங்கட் பிரபு இணையத்தில் பதிவிட்டதன் காரணமாகவே அஜித் அவர் மீது கோபத்தில் இருக்கிறார் என்று அந்தனன் கூறினார். அந்த புகைப்படம் வைரலானதும் ஒருவேளை மங்காத்தா 2 படமாக இருக்கலாமோ என ரசிகர்களும் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.அதனாலேயே இருவருக்கும் இடையே ஒரு சிறு விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அந்தணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.