‘மின்சாரக்கண்ணா’ படத்திற்கு பிறகு விஜய், கே.எஸ். ரவிக்குமார் சேராததற்கு இதுதான் காரணமா?

Actor Vijay: தமிழ் சினிமாவில் பெரும் உச்சம் தொட்ட நடிகராக இருக்கும் விஜய் அடுத்ததாக அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் விஜய் அதுவரை தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தயார் செய்து கொண்டு வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தன் கட்சி போட்டியிடாது என்றும் அறிவித்துவிட்டார்.

அதனால் அதற்குள் எந்தெந்த படங்களுக்கெல்லாம் தனது கால்ஷீட்டை கொடுத்திருக்கிறாரோ அந்தப் படங்களை முடித்ததும் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு வார காலம்தான் படப்பிடிப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: உண்மையிலேயே என்ன நடந்தது? வெளியான ‘விடாமுயற்சி’ வீடியோ குறித்து ஆரவ் போட்ட அதிரடியான பதிவு

படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறார்கள். பெரும்பாலும் விண்டேஜ் நடிகர்களாகவே இருக்கிறார்கள். அதனால் படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு விஜயின் 69வது படத்தை இயக்கப் போவது யார் என்ற ஒரு போட்டியும் இருந்து வருகிறார். ஏற்கனவே எச்.வினோத், அட்லீ, போன்ற பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.

அனைவரிடமும் விஜய் கதை கேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் விஜயின் 69வது படத்தை எச்.வினோத் இயக்கத்தான் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 90களில் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய இயக்குனராக இருந்தவர் கே.எஸ். ரவிக்குமார். ரஜினி, கமல் , பிரபு, சரத்குமார் , அஜித் போன்றவர்களின் சினிமா கெரியரில் பெஸ்ட் படமாக ஒரு சில படங்கள் இருக்கும்.

இதையும் படிங்க: விடாமுயற்சி படப்பிடிப்பில் கவிழ்ந்த ஜீப்!.. அஜித்துக்கு என்னாச்சி?!.. வெளியான அதிர்ச்சி வீடியோ!..

அதில் கண்டிப்பாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ஒரு படமாவது இருக்கும். அதே போல் விஜயை வைத்து மின்சாரக்கண்ணா என்ற படத்தை இயக்கினார் ரவிக்குமார். ஆனால் அதன் பிறகு விஜயை வைத்து படமே எடுக்கவில்லை. அதற்கான காரணம் மின்சாரக்கண்ணா படம் ஓரளவு வெற்றியடைந்த திரைப்படமாக அமைந்திருந்தால் கண்டிப்பாக இருவரும் சேர்ந்து பணிபுரிந்திருப்பார்கள் . ஆனால் மின்சாரக்கண்ணா திரைப்படம் அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை என சித்ரா லட்சுமணன் கூறினார்.

 

Related Articles

Next Story