ஹிந்தி பக்கம் தலை காட்டாத விஜய்! வாய்ப்பும் இல்ல.. ஏன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க
தமிழ் திரையுலகில் நடிகர் விஜயின் புகழ் எந்த அளவுக்கு பரவி இருக்கிறது என அனைவருக்கும் தெரிந்த விஷயம். சமீப காலமாக விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பலரது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் விஜய்யின் அரசியல் பார்வை என்பது சமீப காலமாக சற்று வேகமாகவே செயல்பட்டு வருகின்றது.
தற்போது விஜய் லோகேஷின் லியோ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
மேலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் பெரும்பாலான நடிகர்கள் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மற்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், தனுஷ் போன்ற முன்னனி நடிகர்கள் ஹிந்தி உட்பட மற்ற மொழி படங்களில் நடித்திருக்கின்றனர்.
இதில் தனுஷ் கொஞ்சம் கூடுதலாக ஹாலிவுட் வரைக்கும் சென்று தமிழின் பெருமையை நிலை நாட்டியிருக்கிறார். இப்படி பல நடிகர்கள் தங்களை பான் இந்தியா நடிகர்களாக காட்டும் போது விஜய் மட்டும் அந்த இலக்கை நோக்கி அடையாமல் இருக்கின்றார்.
அதற்கான காரணத்தை எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். அதாவது தயாரிப்பாளர் லலித் ஒரு சமயம் விஜயிடம் ஏன் சார் நீங்க ஹிந்திலலாம் நடிக்கல, ஒரு சான்ஸ் எட்டிப் பார்க்கலாம்ல என்று கேட்டாராம். அதற்கு பதிலளித்த விஜய் ‘முதல்ல நம்ம மக்கள சந்தோஷப்படுத்துவோம், அதுக்கப்புறம் பார்க்கலாம்’ என்று கூறினாராம். ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் விஜயும் ஒரு பான் இந்தியா நடிகராக வருவார் என்று எஸ்.ஜே.சூர்யா கூறினார்.