அந்த நடிகையோடு நடிக்கக் கூடாது!... விஜய்க்கு கண்டிஷன் போட்ட எஸ்.ஏ.சி.....

by Manikandan |
அந்த நடிகையோடு நடிக்கக் கூடாது!... விஜய்க்கு கண்டிஷன் போட்ட எஸ்.ஏ.சி.....
X

பொதுவாக ஒரு நடிகர் இன்னொரு நடிகையுடன் தொடர்ந்து 2 படங்களில் நடித்தாலே அவர்களை பற்றி தவறாக சில பத்திரிகைகளில் கிசுகிசுக்க ஆரம்பித்துவிடுவர். அதற்கு பயந்து போய் நடிகர்கள் நடிகைகள் ஒரு படம் நடித்து விட்டு, அடுத்தடுத்து படங்கள் நடிக்க யோசிப்பார்கள்.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் பல கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளன. அப்படி விஜய் ஆரம்ப காலகட்டத்தில் நடிகை சங்கவி உடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நிலவே, வா, விஷ்ணு, ரசிகன், கோயம்பத்தூர் மாப்பிளை என நான்கு திரைப்படங்களில் சங்கவி உடன் தொடர்ந்து விஜய் நடித்து வந்தார்.

இதையும் படியுங்களேன் - தன்னை ஏமாற்றியவரையும் ஏத்திவிட்ட AK.. அந்த மனசுதான் சார் கடவுள்....

இதனை கண்ட சில பத்திரிகைகள் விஜய்யும் நடிகை சங்கவியும் காதலிக்கின்றனர். அதனால்தான் இருவரும் ஒன்றாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர் என்று எழுதியுள்ளனர். இதனை கவனித்த விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜயிடம் சில கண்டிஷன்கள் போட்டுள்ளார்.

விஜய்யிடம் இனிமேல் சங்கவியுடன் இணைந்து படத்தில் நடிக்க கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். அதன்பிறகு விஜய், சங்கவி உடன் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story