இருந்தாலும் தளபதிக்கு குசும்புதான்! இன்விட்டேஷன் வச்ச பாண்டியம்மாவிடம் வம்பிழுத்த விஜய்

Published on: April 18, 2024
indira
---Advertisement---

Vijay Indreja: தமிழ் சினிமாவில் விஜய் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில்தான் வெளியாகி ரசிகர்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. விஜய் குரலில் வெளியாகும் முதல் சிங்கிள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் யுவன் இசையில் முதல் சிங்கிள் அந்த அளவுக்கு திருப்திகரமாக இல்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர். இதனால் சமூக வலைதளங்களில் யுவனை கண்டபடி திட்டி தீர்த்து வந்தனர் ரசிகர்கள். இதன் உச்சக்கட்டமாக யுவன் சமூக வலைதளங்களில் இருந்து ஒரேடியாக தன்னுடைய அக்கவுண்டை முடக்கி விட்டார்.

இதையும் படிங்க: இந்தா நீயே அடிச்சிக்க… இன்ஸ்டா சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா!…

இந்த நிலையில் சமீபத்தில்தான் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மதுரையில் திருமணம் முடிந்து சென்னையில் வரவேற்பு நடந்தது. கமல் முதல் அனைத்து திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதில் இந்திரஜா விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனால் விஜயுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இந்திரஜா திருமணத்திற்கு விஜய் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை. இருந்தாலும் திருமண அழைப்பிதலை நேரடியாக விஜய் இருந்த கேரளாவிற்கே கொண்டு போய் கொடுத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: சில்க் ஸ்மித்தா சான்சே இல்லை!.. அப்படியே பிரமிச்சி போயிட்டேன்!.. நம்ம குஷ்பு சொல்றத கேளுங்க!..

அந்த நேரத்தில் கோட் பட சூட்டிங்கிற்காக விஜய் கேரளாவில்தான் இருந்தாராம். இந்திரஜா மாப்பிள்ளையை பார்த்து விஜய் ‘மாப்பிள்ளை இந்திரஜா செம ஜாலியான பொண்ணு. அவளை நல்லபடியா பாத்துக்கணும். என்ன இந்திரஜா! ஹேப்பிதானே’ என்று கேட்டாராம். விஜயின் சூட்டிங்கினால்தான் அவரால் வரமுடியவில்லை என ரோபோ சங்கர் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.