கமர்ஷியல் ஹிட் கொடுத்த விஜய் அந்த இயக்குனருடன் மட்டும் கூட்டணி அமைக்காதது ஏன்? வெளியான காரணம்...!
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களுடன் கைகோர்த்து பல்வேறு படங்களை வழங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாகவே அமைகின்றன. அதிலும் சமீபகாலமாக விஜய் அவரது படங்களில் ஏதேனும் ஒரு சமூக கருத்தையும் பேசி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஒரே ஒரு இயக்குனருடன் தற்போது வரை கூட்டணி அமைக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த இயக்குனர் வேறு யாருமல்ல பிரபல இயக்குனர் சுந்தர் சி தான். இவர் தமிழ் சினிமாவில் ஒரு கமர்ஷியல் இயக்குனராக வலம் வருகிறார்.
அதேபோல் நடிகர் விஜய்யும் கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி போன்ற முழுமையான கமர்ஷியல் படங்களில் நடித்துள்ளார். அதோடு, இந்த படங்கள் அனைத்துமே வசூலிலும் சரி திரையரங்குகளிலும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றது.
இப்படி உள்ள நிலையில் விஜய் ஏன் இயக்குனர் சுந்தர் சி உடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய்யிடம் இயக்குனர்கள் கதை சொல்ல வேண்டும் என்றால் மூன்று மணி நேரம் படத்தின் முழு திரைக்கதையையும் சொல்லவேண்டுமாம். ஆனால் சுந்தர்.சி ஒரு வரி கதையை தான் சொல்லுவாராம்.
முன்னதாக நடிகர் கார்த்தி நடித்த உள்ளத்தை அள்ளித்தா படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாராம். இந்த படத்தின் ஒரு வரி கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப்போனதால், முழு கதையையும் கேட்டுள்ளார். ஆனால் சுந்தர் சி எனக்கு முழு கதையை கூறும் பழக்கம் இல்லை என்று கூறிவிட்டாராம்.
இந்த ஒரே ஒரு காரணத்தால் அந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது. இதன் காரணமாகவே அன்று முதல் தற்போது வரை இருவரும் இணைந்து பணியாற்றாமல் உள்ளனர்.