இயக்குனர் செல்வராகவன் குறைந்த செலவில் ஆனால் ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை எடுத்தார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். படம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்தோட டைட்டிலாக இருந்தாலும் கதை முற்றிலும் மாறுபட்டது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் 2010ல் வெளியானது.
இயக்குனர் செல்வராகவன் அதுவரை செல்வராகவன் யுவன் சங்கர் ராஜாவுடனே கைகோர்த்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்திற்காக ஜி.வி.பிரகாஷ்குமார் உடன் கைகோர்த்தார். மர்மங்களைக் கண்டுபிடிக்க செல்லும் ஒரு ஹண்டிங் அட்வென்சர் தான் படம். தனுஷ் நடித்த குட்டி படத்துடன் இந்தப் படம் மோதியது. ரசிகர்கள் மத்தியில் அப்போது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
படத்திற்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ற வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் படமோ தாறுமாறு தக்காளி சோறு. பாடல், நடிப்பு, வசனம், இசை, கிராபிக்ஸ் என அனைத்து அம்சங்களிலும் தெறிக்கவிட்டது. ஆனால் ஒரு சின்ன குறை இருந்தது.
படம் நீளம் அதிகமாக எடுக்கப்பட்டு விட்டது. அதைக் குறைப்பதற்காக கத்தரியைப் போடத் தெரியாமல் ஆங்காங்கே போட்டு விட்டார்கள். கடைசியில் படத்தைப் பார்க்கும்போது தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. இதனால் படத்தோட ரிசல்ட் டம்மியானது.
ஆனால், சினிமாவை நேசிக்கும் ரசிகர்கள் படம் வெளியாகி 10 வருடங்களுக்குப் பிறகு பாகுபலியைப் பார்த்தார்கள். இதென்ன படம்…? அப்பவே நம்ம செல்வராகவன் எடுத்துருப்பார் பாரு… ஹாலிவுட் ரேஞ்ச்ல என பேச ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்குப் பிறகு நெட்டிசன்களும் புகழ்ந்து தள்ளிட்டாங்க. அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தை அதிகமான ஊர்களில் செகண்ட் ரிலீஸ் செய்யப்பட்டது.
படம் திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்புல்லாக ஓடி பட்டையைக் கிளப்பியது. மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு படம் பத்து வருடம் கழித்து வெற்றி பெறுகிறது என்றால் சும்மாவா? இப்போ இயக்குனரிடம் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 எப்போ சார் வரும்னு கேட்குறாங்க…!
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…