ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் கடந்த பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்ப்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து, மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் திரையுலகப் பிரபலங்களுக்காக ஒரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. அந்த வீடியோவில், நானும் உங்க ஃபேன்தானே? என்னை ஏன் உங்க கல்யாணத்துக்கு கூப்பிடல? நாங்கல்லாம் என்ன பண்றது?” என மிகவும் க்யூட்டாக விஜய் தேவரகொண்டாவிடம் அந்தச் சிறுமி கேட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, விஜய் தேவரகொண்டாவின் பார்வைக்கும் சென்றது.

அந்த வீடியோவைப் பார்த்த விஜய் தேவரகொண்டா அந்த விடியோவின் கீழ் ஒரு ரிப்ளை செய்திருந்தார். அதில், புஜ்ஜித்தாயி.. உன்னை வீட்டுக்கு லஞ்சுக்கு கூப்பிடுறேன். உனக்குப் பிடிச்ச சாப்பாடு, ஸ்வீட்ஸ் என்னனு சொல்லு, வீட்லேயே செஞ்சு நாம சந்தோஷமா சாப்பிடலாம் என கூறியிருந்தார். அதேபோல், நடிகை ராஷ்மிகாவும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, அந்தச் சிறுமிக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் காத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கமெண்டில் சொன்னபடி அந்த இளம் ரசிகையைத் தங்கள் வீட்டிற்கு நேரில் அழைத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி, சிறுமிக்குப் பிடித்த உணவுகளைப் பரிமாறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். விஜய் தேவரகொண்டா அந்தச் சிறுமியைக் கையில் தூக்கிக் கொஞ்சும் வீடியோவும், அவர்கள் அந்தச் சிறுமியுடன் நேரத்தைச் செலவிடும் கியூட்டான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
https://www.instagram.com/reel/DWGkd9MEupR
ஒரு சின்னக் குழந்தையின் ஆசையை மதித்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த இந்த நட்சத்திர ஜோடியின் பண்பை ரசிகர்கள் பாராட்ட்யி கமெண்ட் செய்து வருகின்றனர்.





