வின்னர் ’கைப்புள்ள’ காலை உண்மையில் உடைச்சது கட்டதுரை இல்லியாம்... யாரு தெரியுமா?

வடிவேலு தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறிவிட்டார். ஒவ்வொரு படத்துக்கும் அவரின் ஸ்டைலே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று தரும். அதிலும் வின்னர் கைப்புள்ள மீது தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் ஆசை குறையவில்லை. அதில், அவர் நடிப்பு அவ்வளவு எதார்த்தமாக அமைந்திருக்கும். அதில் அவரின் எண்ட்ரி குறித்து சுந்தர் சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டி. ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தின் மூலம் வடிவேலு திரைத்துறைக்கு அறிமுகமானார். வடிவேலுவின் ஆரம்ப காலத்தில் அவருக்கு பெரிய துணையாக இருந்தவர் விஜயகாந்த். சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு காரணம் விஜயகாந்த் தானாம்.
சினிமாவில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்துவிட்டால், இயக்குனர்கள் எந்த கவலையும் இல்லாமல் இருப்பார்களாம். அவரிடம், காட்சியை சொல்லிவிட்டால் வசனத்தை எல்லாம் வடிவேலுவே பார்த்து கொள்வாராம். வெற்றி கொடி கட்டு, கூடி வாழ்ந்தல் கோடி நன்மை, நண்பர்கள், மனதை திருடிவிட்டாய், தவசி, சந்திரமுகி, இம்சை அரசன் 23வது புலிகேசி, போக்கிரி, மருதமலை மற்றும் காத்தவராயன் உட்பட பல படங்கள் அவரின் திரை வாழ்விற்கு பெரிய அடித்தளமாக அமைந்தது.
இதையும் படிங்க: வடிவேலு வந்து எங்கிட்ட சினிமா சான்ஸ் கேட்கல…சொல்கிறார் ராஜ்கிரண்…அப்புறம் எப்படி படத்துல அறிமுகம்?
அதிலும், வின்னர் படத்தில் வடிவேலுவின் காமெடி எத்தனை முறை பார்த்தாலும் ரசிகர்களை சிரிக்க வைக்காமல் இருந்தது இல்லை. அப்படத்தை சுந்தர்.சி இயக்கி இருந்தார். பிரசாந்த் நாயகனாக நடித்தார். முதலில் இப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க சுந்தர் விரும்பினார். அப்போது, வடிவேலுவிற்கு அடிப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருக்காகவே, படத்தின் ஆரம்பத்திலே அவருக்கு அடிப்பட்டதாக காட்சி அமைத்தாராம்.
அதைக்கேட்ட வடிவேலு, டக்குனு பாயிண்ட்டை பிடித்து அப்போ நான் இப்படி நடக்கலாமா என ஒரே நேரத்தில் பத்து மாதிரி நடந்து காட்டினார். அது தான் படத்திற்கு பெரிய ப்ளஸ்ஸாக அமைந்தது என சுந்தர்.சி தனது சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.