Connect with us
vivek

Cinema News

ரஜினி மாதிரிலாம் ட்ரை பண்ணாதீங்க! நீங்க யாருனு காட்டுங்க பாஸ் – விவேக் சொன்ன அந்த நடிகர்

Actor Vivek: தமிழ் திரையுலகில் மிகவும் உன்னதமான நடிகர் விவேக். சமூக கருத்துக்களை தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவை காட்சிகள் மூலம் மக்கள் அறிய முயற்சி செய்பவர். மக்களிடம் பொதிந்து கிடக்கும் மூட நம்பிக்கைகளை பற்றியும் அதெல்லாம் எதற்கு என்பதை தன்னுடைய நகைச்சுவை மூலமாகவே சொல்லி புரிய வைத்தவர் விவேக்.

இதனாலேயே சின்னக் கலைவாணர் என்ற பெயரை எடுத்தார் விவேக். கிட்டத்தட்ட தமிழில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் விவேக் ஏராளமான விருதுகளையும் அள்ளிக் குவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: வாக்கிங்கில் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்! இவ்ளோ விஷயம் நடந்துருக்கா!…

அப்துல்கலாம் மீதுள்ள அன்பின் காரணமாக ஏராளமான மரக்கன்றுகளை நட்டு சாதனையும் படைத்திருக்கிறார். அப்துல் கலாம் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார் விவேக்.

இப்படி பல நல்ல விஷயங்களிலும் தன்னுடைய கவனத்தை கொண்டிருந்தார்.  இந்த நிலையில் ஒரு நடிகரிடம் விவேக் ‘ஏன் ரஜினி மாதிரி ட்ரை பண்ண ஆசைப்படுறீங்க?’ என கேட்டாராம். ஒரு ஏர்போர்ட்டில் திடீரென அந்த நடிகரை பார்த்து விவேக் ‘ நீங்க நல்லா நடிக்கிறீங்க. எந்த கதாபாத்திரமானாலும் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திறீங்க.’

இதையும் படிங்க: அப்படி போடு… Bullygang-ல் காலியான ஒரு பக்கா விக்கெட்… மிஸ்ஸான பூர்ணிமா..

‘இத அப்படியே தக்க வச்சுக்கிட்டீங்கனா எதிர்காலத்தில் சூப்பரான ஒரு நடிகராக வர வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் ஏன் ரஜினி சார் மாதிரி நடிக்கிறீங்க. உங்கக் கிட்ட இருக்கிற தனித்திறமைய  கொண்டு வாங்க’ என கேட்டாராம்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை. நடிகர் பாபிசிம்ஹா. பாபிசிம்ஹா அடிப்படையிலேயே ஒரு ரஜினி வெறியர். பிடித்த நடிகரும் ரஜினிதான். பிடித்த வில்லனும் ரஜினிதான் என்று சொன்னவர். ஆனால் அவர் நடிப்பில் ரஜினியின் சாயலும் அவ்வப்போது வெளிப்படும்.

இதையும் படிங்க: 15 வயதில் கமலுக்கே நடனம் சொல்லிக்கொடுத்த பிரபுதேவா!.. அட அப்பவே அவர் அதுல கிங்!…

இதனாலேயே விவேக் அவருக்கு சிறிய ஆலோசனை மாதிரி சொன்னதாக ஒரு பிரபல மூத்த பத்திரிக்கையாளர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top