Rajinikanth: ஒரு படத்தை இயக்குவதே பெரிய விஷயம். இதில் ரஜினியை இயக்குவது மலையளவு மகிழ்ச்சியை கொடுக்கு ம். அப்படிப்பட்ட நேரத்தில் கடலளவு துக்கம் வந்தால் எப்படி தாங்கிக்கொள்வது. அப்படி ஒரு நிலைக்கு தான் பாண்டியன் படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சென்று இருக்கிறார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடைய சினிமா கேரியரில் 75 படங்களை இயக்கியவர். அதில் ரஜினியை வைத்துமட்டுமே 25 படங்களை இயக்கி இருந்தார். இவருடன் ஒரு யூனிட் இருந்ததாம். கேமராமேன் விநாயகம், எடிட்டர் ஆர்.விட்டல், மேக்கப்மேன் முஸ்தபா மற்றும் தயாரிப்பு நிர்வாகி, இணை டைரக்டர், உதவி டைரக்டர் என்று 15 பேர் அதிலிருந்தனர்.
இதையும் படிங்க: தூங்குனது போதும் அவதாரம் எடுத்து எழுந்து வாங்க கல்கி!.. பிரபாஸ் படத்தை பங்கம் பண்ணும் ரசிகர்கள்!..
இவர்கள், முத்துராமனின் படத்துக்கு குழுவாகவே பணிபுரிந்தனர். வேறு டைரக்டர்களிடம் போய் பணியாற்றியது இல்லை. அந்த 14 பேருக்கும் முத்துராமன் நல்லது செய்ய எண்ணி ரஜினியிடம் எங்கள் யூனிட்டுக்கு ஒரு படம் பண்ணி தாங்க என்றாராம். ரஜினியும் சரியான நேரத்தில் முடிவு சொல்வதாக கூறுகிறார்.
ராஜா சின்ன ரோஜா படம் முடிந்த கையோடு வேறு இயக்குனர் படத்தில் ரஜினி நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் எஸ்.பி.முத்துராமன் யூனிட்டுக்கு கொடுக்க இருந்த படத்தினை உடனே முடிக்க சொன்னாராம் ஏவிஎம் சரவணன். அந்த யூனிட்டுக்காக தயாரானது தான் பாண்டியன் திரைப்படம்.
இயக்குனராக இருந்த எஸ்.பி.முத்துராமனுக்கு தயாரிப்பு எளிதாக இல்லை. இதை கவலையாக சரவணன் மற்றும் ரஜினிகாந்திடம் சொல்ல அவர்கள் நாங்கள் பார்த்து கொள்வதாக அந்த வேலையை எடுத்து கொண்டனராம். படத்தினை எந்த பேனரில் தயாரிப்பது என்ற கேள்வி வர ரஜினிகாந்த், முத்துராமனிடம் உங்கள் தாயாரின் பெயரிலே தயாரியுங்கள் என்றாராம்.
இதையும் படிங்க: கில்லி படத்தின் ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு பின்னால இவ்ளோ பெரிய சோகமா?..
அதன்படி “விசாலம் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கப்பட்டது. படம் வேகமாக வளர்ந்தது. குஷ்பூ தன்னுடைய அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதால் சம்பளத்தினை குறைத்து கொண்டார். படமும் ரிலீஸுக்கு தயாராகி இருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத அளவு 10 நாட்கள் இருக்கும் நிலையில் எஸ்.பி.முத்துராமனின் மனைவி உயிரிழந்தார்.
படத்தின் ரிலீஸைத் தள்ளி வைக்க ரஜினி உள்பட எல்லோரும் கூறியும்கூட, எஸ்.பி.முத்துராமன் அதற்கு சம்மதிக்கவில்லை. தேதி வெளியாகிவிட்டது குறித்த நாளில் படத்தினை ரிலீஸ் செய்து விட வேண்டும். என் மனைவிக்கு நான் கடமை தவறினால் பிடிக்காது என்பதை கூறி காரியம் முடிந்த மூன்றாவது நாளே பட ரிலீஸுக்கான வேலையை பார்க்க வந்துவிட்டாராம். அப்படம் குறித்த நாளில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?
