Connect with us

என் எல்லா வெற்றிக்கும் அவளே காரணம்!.. லோகேஷுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கா?!.

lokesh

Cinema News

என் எல்லா வெற்றிக்கும் அவளே காரணம்!.. லோகேஷுக்கு இப்படி ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கா?!.

எம்.பி.ஏ படித்துவிட்டு பொறுப்பாக வங்கி வேலைக்கு சென்றவர் லோகேஷ் கனகராஜ். ஆனால், உள்ளுக்குள் சினிமா எடுப்பதில் ஆர்வம் இருந்தது. களம் எனும் ஒரு குறும்படத்தை இயக்கினார். இது வரவேற்பை பெற்றது. இவரது நண்பர்கள் சிலரும் அப்போது குறும்படங்களை இயக்கி வந்தனர். ‘மாநகரம்’ பட கதையை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை சந்தித்து பேசினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. பல மாதங்கள் இப்படி கழிந்தது. ஒருவழியாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அப்படத்தை தயாரிக்க முன்வந்தார். அப்படித்தான் இயக்குனரானார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj

அதன் பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என முன்னேறினார். விக்ரம் திரைப்படத்தின் மெகா வெற்றி லோகேஷ் கனகராஜை பெரிய அளவில் ரீச் ஆக்கியுள்ளது. தற்போது மீண்டும் விஜயுடன் லியோ படத்திற்காக இணைந்துள்ளார். இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைதான் என்பது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் தனது திறமையால் வெற்றி பெற்றார் என்றாலும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் யார் என்பது பற்றி ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். என் வெற்றிக்கு பின்னால் இருப்பவர் என் மனைவிதான். இயக்குனராகவதற்கு முன் வங்கியில் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் இருந்தேன். நான் என் வேலையை விட்டாலும் என் மனைவி வங்கி பணிக்கு சென்று குடும்பத்தை கவனித்துக்கொண்டார்.

vijay1

vijay lokesh

அப்போது என் குழந்தைக்கு வெறும் 7 மாதம் மட்டுமே. ஆனால், அப்போதும் அவர் வேலைக்கு சென்றார். எனது இரண்டாவது படமான கைதி படத்திற்கு நான் கையெழுத்திட்ட போதுதான் என் மனைவி வேலையை விட்டார். இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கும், என் வெற்றிக்கும் என் மனைவியே காரணம். அவர் ஒத்துழைக்கவில்லை எனில் நான் சினிமாவுக்கே வந்திருக்க முடியாது’ என மனைவி குறித்து லோகேஷ் உருக்கமாக பேசியுள்ளார்.

லோகேஷ் ஐஸ்வர்யா எனும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு அத்விகா, ஆருத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: ஒத்தையா நின்னு ஆட முடியாது என்பதை உணர்ந்த விஜய்சேதுபதி!.. அடுத்து வெளியான அதிரடியான தகவல்…

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top