அந்த சிறப்பான சம்பவத்துக்கு ஹீரோ சந்தானம் ஓகே சொல்வாரா.?! ஏக்கத்துடன் ரசிகர்கள்...
ஆரம்ப காலகட்டத்தில் காமெடியனாக மட்டும் நடித்து வந்த சந்தானம் இப்போது ஹீரோவாக மட்டுமே படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள குளு குளு திரைப்படம் வரும் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாக காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பாரா இல்லையா என்கிற அளவிற்கு ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வி எழும்பி உள்ளது . இதனையடுத்து, ஏற்கனவே சந்தானம் சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார். இதனால், இரண்டாவது பாகத்திற்கும் அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால், பல இயக்குனர்கள் சந்தானத்திடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்களாம்.
அந்த வகையில், இயக்குனர் எம்.ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக உள்ளதாம். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த காமெடி காட்சிகளை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவுக்கு சூப்பராக இருக்கும்.
இதையும் படியுங்களேன்- சூர்யா – சிவகார்த்திகேயன் இடையே கடும் போட்டா போட்டி.. அந்த புது இயக்குனரிடம் என்னதான் இருக்கிறதோ.?!
முதல் பாகத்தில் நடித்த சந்தானம் இரண்டாவது பாகத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரேயே நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால், தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் இதற்கு ஒப்புக்கொள்வாரா..? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.