சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் தான் ஓபனிங் சாங் என்ற ஒரு ட்ரெண்டையே கொண்டு வந்திருப்பார் போல. அந்த வகையில் அவர் நடித்த பல படங்களில் ஓபனிங் சாங் பெரிய அளவில் பேசப்படும். பொதுவாக என் மனசுத் தங்கம் என்று முரட்டுக்காளையில் அவருக்கு ஓபனிங் சாங்கை மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார்.
அப்போது முதலே ரஜினிகாந்த் படங்களில் ரசிகர்கள் ஓபனிங் சாங்கை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதே போல அண்ணாமலை படத்தில் வந்தேன்டா பால்காரன், பாட்ஷா படத்தில் நான் ஆட்டோக்காரன், முத்து படத்தில் ஒருவன் ஒருவன் முதலாளி என பல படங்களில் ரஜினியின் வருகையை சிறப்பிப்பதற்காக இப்படி ஓபனிங் பாடல்களைப் படத்தில் வைப்பார்கள். ரசிகர்களும் இதைத் தான் பெரிதும் விரும்புவார்கள்.
தியேட்டரில் விசில் பறக்கும். ரசிகர்கள் எழுந்து நின்று ஆட்டம் போடுவார்கள். இதைக் கண்கூடாக நாம் பார்க்கலாம். ரஜினிக்கு இப்போது 72 வயது ஆன பின்னும் அதே இளமைத் துடிப்புடன் நடித்து வருகிறார். அவருக்கு ஓபனிங் சாங் எந்தக் காலத்திலும் எடுபடும் என்பதே உண்மை.
அந்தவகையில், இப்போது வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ஒரு விசித்திரமான கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார். ரஜினி படத்தில் ஓபனிங் சாங்கைக் கமல் பாடுவாரா? அப்படி கமல் பாடினா எவ்ளோ நல்லாருக்கும்? இதை நீங்க எப்பவாவது யோசித்துப் பார்த்திருக்கீங்களான்னு கேட்டுள்ளார்.
அதற்கு சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான். ரஜினியோட ஓபனிங் சாங்கை நீங்க பாடணும்னு அவரது படத்தை இயக்கும் இயக்குனரோ, தயாரிப்பாளரோ கமலைக் கேட்டால் எந்த விதத் தயக்கமும் இன்றி நிச்சயம் கமல் ஒப்புக்கொண்டு பாடுவார். ஏன்னா அவங்க இரண்டு பேருக்கும் உள்ள நட்பு அப்படி இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also read: மெய்யழகன் படத்தில் கமல் பாட்டு… ஆனா யாராவது இதைக் கவனிச்சீங்களா?
ஒருவேளை ரஜினிகாந்த் படத்தின் ஓபனிங் சாங்கைக் கமல் பாடுவதாக இருந்தால் ரசிகர்களின் கொண்டாட்டம் இருமடங்காகும் என்பதே உண்மை. படத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பில்லாமல் உள்ளது. இந்த மாதிரியாவது சேர்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Vidamuyarchi: அஜித்தின்…
VijayTv: விஜய்…
விஜய் 69…
சினிமாவிலும் சரி…
Sivakarthikeyan: இசை…