ராமராஜன், மோகனை விட கவுண்டமணிக்கு தான் ரீ-என்ட்ரி சூப்பரா அமையப்போகுதா? அதையும் தான் பார்ப்போமே..!

நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி நடித்த 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அப்போது இருந்தே படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. இது என்ன ரீ என்ட்ரி காலமா என்று கேட்கும் அளவிற்கு வந்துவிட்டது. சமீபத்தில் 80களில் கலக்கிய ராமராஜன், மோகன் ஆகிய பிரபல நாயகர்களின் படங்கள் ரீமேக் ஆனது. ஆனால் ஒன்றும் சொல்ற மாதிரி இல்லை.

இந்த வேளையில் கவுண்டமணி இவர்களிடம் இருந்து மாறுபட்டவராக ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதால் எதிர்பார்ப்பு வருகிறது. ஏன்னா அவங்க எல்லாம் ஹீரோ. ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்க்கத் தான் செய்வாங்க. ஆனா கவுண்டமணி டயலாக் பேசுனாலே நமக்கு சிரிப்பு வந்துவிடும். அவரை நீண்ட நாளாக திரையில் பார்க்காமல் இருந்ததால் இன்னும் எதிர்பார்ப்பு இருக்கும்.

அது தவிர அவர் ரசிகர் மன்றமும் வைக்கவில்லை. இதனால் தனது கருத்துகளை சுதந்திரமாக சொல்வார். அரசியல் காமெடி என்றாலே அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி இருக்கும். முந்தைய படங்களைப் பார்த்தாலே தெரியும். சூரியன் படத்தில் நான் ரொம்ப பிசி என்ற ரீதியில் போன் பேசிக்கொண்டு இருப்பார்.

Otha Ootuu Muthaiah

Otha Ootuu Muthaiah

அப்போது காமெடி நடிகர் பசி நாராயணன், 'போன் வயர் பிய்ஞ்சி ஒரு வாரமாச்சு'ன்னு சொல்வார். அப்போதும் தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் கவுண்டமணி அதற்கு ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு கவுண்டமணி அடிக்கும் பஞ்ச் தான் தியேட்டரையேத் தெறிக்க விடும். 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...' என்று பஞ்ச் டயலாக்கை அவ்வப்போது அவிழ்த்து விடுவார். அந்த வகையில் இது அரசியல் படம் என்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதே நேரம் இதற்கு முன் அவர் நடித்த அரசியல் படம் '49 ஓ' பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்கு அவருக்கு காமெடி டயலாக் எழுதுபவரே டைரக்டர் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சினிமா ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்வாரா கவுண்டமணி என்பது படம் வெளிவந்ததும் தெரிந்து விடும்.

இதையும் படிங்க... கவுண்டமணி ‘சுள்ளு’ன்னு சொன்னாருன்னா இவரு ‘சுளீர்’னுல சொல்றாரு… அது சரி நமக்கு ஏன் வம்பு?!

கவுண்டமணி கதாநாயகனா நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா நல்ல நகைச்சுவை உள்ள படம். கவுண்டமணி மட்டுமல்லாமல் பல நகைச்சுவை நடிகர்கள் அதில் நடிச்சிருக்காங்க.

கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றவர்களுக்கு நகைச்சுவை வசனத்தை எழுதிக் கொடுத்துக் கொண்டு இருந்தவர் ராஜகோபால். அவர் தான் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். அதனால இந்தப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story