விஜய் படத்தை விட பெரிய வாய்ப்பு.! விடுவாரா நெல்சன்.! பிஸ்ட் நிலை என்ன.?!
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்களேன்-பார்ட்-2 எடுக்கும் விஜய் சேதுபதி.! ‘இப்போயாவது அத செய்யுங்கள்’ கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்.!
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. தற்போது, ரிலீசுக்கான வேலைகள், பாடல் பதிவு எடிட்டிங் என மற்ற வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் எப்போ ரிலீசாகும் என ரசிகர்கள் முதல் தியேட்டர் ஓனர்கள் வரை அனைவரும் காத்திருக்கின்றனர். ரிலீஸ் குறித்து அறிவிப்பானது விரவாயில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு கதை சொல்லியுள்ளாராம், அதற்கு ரஜினியும் ஓகே சொல்லியுள்ளாராம். அட ஆமாங்க... பீஸ்ட் திரைபடம் ரிலீசுக்கான வேலைகள் ஒரு பக்கம் நடக்க... ரஜினி ஓகே சொல்லிய கதையை ஒரு பக்கம் விரிவாக எழுதி வருகிறாரம்.
இதற்காக, நெல்சன் விட முயற்சியில் முழு வேலையும் இரன்டும் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் பீஸ்ட் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறார்கள் விஜயின் ரசிகர்கள்.