பிரசாந்தை பழைய ஃபார்முக்கு கொண்டு வர போராடும் வெற்றி இயக்குனர்!.. எல்லாம் அந்த படத்தால வந்த வினை..
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய் அஜித் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு வெற்றி கொடி நாட்டி முன்னனி நடிகராக வலம் வந்தவர் தான் பிரசாந்த். இவருக்கு பக்கபலமாக இருப்பவர் இவரின் தந்தையான நடிகர் தியாகராஜன்.
அன்றிலுருந்து இன்று வரை பிரசாந்தின் நல்லது கெட்டதுகளில் கூடவே இருந்து ஒரு நண்பராக இருந்து வருகிறார் என்று சொல்லலாம். காலப்போக்கில் பிரசாந்தின் மார்க்கெட் சரிய தொடங்க தன் நிறுவனத்தின் மூலமாகவே பிரசாந்தை நடிக்க வைத்தார் தியாகராஜன்.
இதையும் படிங்க: ஒரே மாதிரியான கதை!.. ஒரே நடிகர்கள்.. ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி அதிக வெற்றி பெற்ற படம் எதுனு தெரியுமா?..
ஆரம்பத்தில் ஒரு சாக்லேட் பாயாக சார்மிங் நடிகராக பெண்களை கவர்ந்து வந்த பிரசாந்தின் கெரியரில் குறிப்பிடத்தக்க படங்களாக ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், ஜீன்ஸ், போன்ற படங்களை கூறலாம். விஜய் , அஜித் இவர்கள் தலை தூக்க பிரசாந்தின் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இல்லையென்றால் அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் எப்படி மூவேந்தர்களாக பிரவேசித்தார்களோ அந்த மாதிரி இந்த காலகட்டத்தில் விஜய், அஜித், பிரசாந்த் இவர்களின் வளர்ச்சிகள் கண்டிப்பாக இருந்திருக்கும். நீண்ட நாள்களுக்கு பிறகு அந்தகன் என்ற படத்தில் நடித்தார் பிரசாந்த். ஆனால் படப்பிடிப்பு முடிந்தும் ஏதோ சில பல காரணங்களால் படம் வெளியாகமல் இருக்கிறது.
இதையும் படிங்க : ரட்சகன் – 2வில் இவர் தான் ஹீரோ!.. மாஸ் ஹீரோவை களமிறக்க துடிக்கும் இயக்குனர்..
ஒரு வேளை அந்த படம் வெளியானால் அந்தகன் படத்திற்கு பிறகு பிரசாந்தை மறுபடியும் பழைய நிலைமைக்கு நான் கொண்டு வருவேன் என்று இயக்குனர் பிரவீன் காந்தி கூறியிருக்கிறார். இவர் ஏற்கெனவே பிரசாந்தை வைத்து ஜோடி, ஸ்டார் போன்ற படங்களை இயக்கியவர். அந்தகன் படம் ரிலீஸ்க்கு பிறகு மீண்டும் பழைய கூட்டணியான ஏஆர்.ரகுமான், பிரசாந்த், வைரமுத்து இவர்களை வைத்து ‘பைக்’ என்ற படத்தை தொடங்குவேன் என்று கூறியிருக்கிறார் பிரவீன் காந்தி.
ஸ்டார் படத்திற்கு பிறகு அதே வெற்றிக் கூட்டணியில் பைக் என்ற பெயரில் படம் இயக்கும் முயற்சியில் இருந்திருக்கிறாராம் பிரவீன். ஆனால் அது அப்படியே ஸ்டாப் ஆகிவிட்டதாம். அதனால் அதை மறுபடியும் கையிலெடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார். ஆனால் பிரசாந்திற்கோ வின்னர் - 2 வில் நடிக்க வேண்டும் என்று ஆசையாம். இதை தியாகராஜன் பிரவீன் காந்தியிடம் கூறியிருக்கிறார். அதற்கும் பிரவீன் காந்தி பரவாயில்லை. அதற்கான ஸ்கிரிப்டை தயார் செய்கிறேன், எடுக்கலாம் என்று கூறியிருக்கிறாராம்.