‘விடாமுயற்சி’ யில் அஜித்தை அடுத்து களமிறங்கிய முதல் பிரபலம்?.. அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்...

by Rohini |   ( Updated:2023-05-07 06:51:36  )
ajith
X

ajith

எப்படியோ அஜித்தின் ஏகே 62 படத்தின் தலைப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு தெம்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் லைக்கா புரொடக்ஷன். பிப்ரவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட வேண்டிய அஜித்தின் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு சில பல தடங்கல்களால் இன்று வரை அப்படியே கிடக்கிறது.

ajith1

ajith1

மே 1 அஜித்தின் பிறந்தநாள் அன்று லைக்கா ப்ரொடக்ஷன் ஏகே 62 படத்தின் தலைப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு செம்ம ட்ரீட்டை வைத்திருக்கின்றனர். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தின் தலைப்பை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

எப்பொழுதும் போல அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டம் என்றாலும் விஜய் ரசிகர்கள் அந்த தலைப்பை மிகவும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே ராஜன் சமீபத்தில் விடா முயற்சி என பெயரிடப்பட்டுள்ள அஜித் பட தலைப்பை பற்றி ஒரு பேட்டியில் கூறினார்.

ajith2

ajith2

அதாவது அஜித் நடித்து வரும் சமீப கால படங்கள் பெரும்பாலும் தமிழிலேயே பெயரிடப்பட்டு வெளியிடப்படுகின்றன .அதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் அஜித்திற்கும் தனது பாராட்டுக்கள் என்றும் மிகவும் புகழ்ந்து பேசினார். இவருடைய இந்த பேட்டியை ஒரு வீடியோவில் பார்த்த விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி கே ராஜனுக்கு தொலைபேசியில் அழைத்து பேசினாராம்.

அதாவது உங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி எனவும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை கொடுத்து வர வேண்டும் என்றும் மகிழ் திரு மேனி ராஜனிடம் கூறினாராம். இதைப் பற்றியும் குறிப்பிட்டு பேசிய ராஜன் மகிழ்திருமேனி எவ்வளவு ஒரு நல்ல மனிதர் என்றும் அவருக்கு அந்தப் பெயரை வைத்ததற்கு அவர்கள் பெற்றோர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

ajith3

k rajan

அதுமட்டுமில்லாமல் துணிவு படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றியும் பகா சூரணில் நடித்த தனது கதாபாத்திரத்தை பற்றியும் மகிழ் திருமேனியிடம் ராஜன் கூறியிருக்கிறார். ஏனென்றால் நானும் ஒரு நடிகன் தான் .எனக்கு ஏற்ற கதாபாத்திரம் விடாமுயற்சியில் இருந்தால் என்னை அழைக்கவும், இல்லை என்றால் வேண்டாம் என்று ராஜன் மகிழ்திருமேனியிடம் கூறினாராம். மகிழ் திருமேனியும் கண்டிப்பாக அந்த மாதிரி கதாபாத்திரம் இருந்தால் தங்களை அழைக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம்.

இதையும் படிங்க : மனோபாலாவின் ஆத்மா சாந்தியடையனும்னா அரவிந்த்சாமி இத செய்யனும்!.. வேண்டுகோள் வைத்த தயாரிப்பாளர்..

Next Story