சமந்தா செஞ்ச அதே மேட்டரை செய்யும் சோபிதா… இப்போ சைதன்யா என்ன செய்வாரு?
Sobhita: நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவியாக போகும் சோபிதா துலிபாலா அடுத்து செய்ய இருக்கும் விஷயத்தால் சமந்தா ரசிகர்கள் தற்போது கொதித்தெழுந்துள்ளனர். அது குறித்த கேள்விகளும் இணையத்தில் அதிகமாக குவிந்து வருகிறது.
சினிமாவின் பிரபல ஜோடியாக வலம் வந்தது நாக சைதன்யா மற்றும் சமந்தா தான். இவர்கள் இரு மதம் முறைப்படி வெகு விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகள் மட்டுமே எடுத்தது. திடீரென தங்களுடைய பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோசியர் இப்படி சொல்லிட்டாரே!…
ஆனால் இந்த பிரிவு அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் டேட்டிங் செய்த புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தது. அப்போதிலிருந்தே, சோபிதாவுடனான உறவால் தான் சமந்தா சைதன்யாவை பிரிந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வந்தனர்.
இது மட்டுமல்லாமல் சமந்தாவின் விவாகரத்துக்கு அவர் புஷ்பா படத்தில் ஆடிய ஒற்றைப் பாடலும் காரணமாக கூறப்பட்டது. மிகவும் பிரபலமான அக்கினி குடும்பத்திலிருந்து சமந்தா இப்படி செய்தது பிரச்சனையை ஏற்படுத்தியதாகவும், தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால்தான் இந்த முடிவை எடுத்தனர் எனவும் தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: பா.ரஞ்சித்தின் அடுத்த வில்லன் ஆர்யாவே.. ஆனா ஹீரோ யாரு தெரியுமா?
இந்த விஷயம் தற்போது இணையத்தில் கசிந்து வரும் நிலையில், இதற்கு மட்டும் அக்கினியை குடும்பத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லையா என சமந்தா ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றன. திருமணம் வேறு நடக்க இருப்பதால் சோபிதா இந்த படத்தில் இணைவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.