Categories: Cinema History Cinema News latest news

‘உள்ளத்தை அள்ளித்தா’ இரண்டாம் பாகம் தயாராகிறதா?.. நடிகரின் ஆசையை அலட்சியப்படுத்திய சுந்தர்.சி!..

சுந்தர்.சி இயக்கத்தில் நகைச்சுவையில் சக்கபோடு போட்ட திரைப்படம் ‘உள்ளத்தை அள்ளித்தா’. இந்த படத்தில் நடிகர் கார்த்திக், நடிகை ரம்பா, மணிவண்ணன், கவுண்டமணி, போன்ற பல திரை நட்சத்திரங்கள் நடித்த படம். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அதற்கு முக்கிய காரணம் மணிவண்ணன் , கவுண்டமணி காம்போவில் அமைந்த காமெடியே ஆகும். கவுண்டமணியின் கவுண்டருக்கு இன்று வரை யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது. இப்பொழுது வரை அந்த படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : லொள்ளு சபா குழுவினரை மிரட்டிய எஸ்.ஏ.சி!! தளபதிக்கு ஐஸ் வைத்த விஜய் டிவி… இப்படியெல்லாம் நடந்திருக்கா??

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள், கார்த்திக்கின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகர் ஜீவா தாமாகவே போய் சுந்தர்.சியிடம் கேட்டாராம். ஏற்கெனவே இரண்டு நாள்களுக்கும் முன்பாக தான் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், நடிப்பில் காஃபி வித் காதல் படம் வெளியானது.

அந்த படத்தின் படப்பின் போது தான் ஜீவா சுந்தர்.சியிடம் கேட்டாராம். அப்பொழுது சுந்தர்.சி ஜீவாவிடம் ‘கார்த்திக் இடத்தில் யார் வேணுனாலும் நடிக்கலாம், கதையை கூட கொஞ்சம் மாற்றி அமைக்க முடியும், ஆனால் கவுண்டமணி இடத்தில் அவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. படத்தின் முழு வெற்றிக்கு கவுண்டமணியின் கவுண்டரும் ஒரு முக்கிய காரணமாகும்’ என்று கூறி படத்தின் இரண்டாம் பாகத்தின் கனவை நிறுத்திவிட்டாராம் சுந்தர்.சி

Published by
Rohini