குறிவச்சா இரை விழுந்தே தீரணும்... 1000 கோடியைத் தொடுமா கூலி?

வேட்டையன் படம் முடிந்த கையோடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் கூலி. இந்தப் படம் முதல் 1000 கோடியைத் தட்டிப் பறிக்குமா என்பதைப் பார்க்கலாம்.

மீனாட்சி சௌத்ரிக்கு டங் ஸ்லிப்பானதால தான் கோட் படத்துல சூப்பர்ஸ்டார் விஜய் கூட நடிச்சதுல மகிழ்ச்சின்னு சொல்லிட்டாங்க. அது மறுபடியும் புயலைக் கிளப்புற மாதிரி இருந்தது. ஒரே சூப்பர்ஸ்டார் தான். அது ரஜினி மட்டும் தான்.விஜய் வந்து பெரிய ஸ்டார் தான். வசூல் சக்கரவர்த்தி தான்.

துணிவு படத்தில தான் முதன் முறையா சப்போர்டிங் ஆர்டிஸ்ட் போஸ்டரையும் சோலோவா வெளியிட்டார் அஜீத். விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்துக்கும் இது தொடரும். இது பெரிய மனசு. அதை லோகேஷ் கனகராஜ் கூலி படத்துக்கும் அறிமுகப்படுத்துவது பாராட்டணும்.

சத்யராஜ் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறாங்க. மிஸ்டர் பாரத்ல ரஜினிக்கு அப்பா கேரக்டர்ல கலக்கலா நடிச்சிருப்பாரு. என்னம்மா கண்ணு சௌக்கியமாங்கற அந்தப் பாட்டுல ரஜினி, சத்யராஜ் என இருவருமே போட்டிப் போட்டு நடிச்சிருப்பாங்க. கூலி படத்துல 100வது நாள், 24 மணி நேரம் கெட்டப்ல கலக்கலா நடிக்கிறாரு. சிவாஜில ஒத்துக்காத சத்யராஜ் கூலில எப்படி ஒத்துக்கிட்டாருன்னு கேள்வி எழலாம்.

coolie

சினிமாவில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை. கூலி படத்துல நடிக்கறதுக்குக் காரணம் இந்தப் படத்துல சத்யராஜ் கேரக்டர் பிடிச்சிருந்தது. ரஜினி படம் மாஸ். அதனால் தான் நடிச்சிருக்காரு. லியோ, கோட் படங்கள் 1000 கோடி அடிக்குமான்னு தெரியல. எதிர்பார்த்தாங்க.

Also read: விஜய் 69 ல இது அப்டேட்டுக்கு அப்டேட்…! அது மட்டும் நடந்தா?

ஆனா நடக்கல. ஆனா கூலி தான் முதல் முதலா 1000 கோடியை அடிக்கும்னு சொல்றாங்க. இது நடக்குறதுக்கு 99 சதவீதம் வாய்ப்பு இருக்கு. சௌபின் சாகிர், உபேந்திரா, சுருதிஹாசன், நாகர்ஜூனா, சத்யராஜ், என பெரிய பிம்பங்கள் இருக்குறாங்க.

எல்லாத்துக்கும் மேல லோகேஷ் - ரஜினி காம்போ. அதனால1000 கோடி அள்ள வாய்ப்பு இருக்கு. மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் தஞ்சை அமலன் தெரிவித்துள்ளார். வேட்டையன் வரும் அக்டோபர் 10ல் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Articles
Next Story
Share it