கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா?
உலகநாயகன் கமல் நடிப்பில் படங்கள் ஒவ்வொன்றுமே வித்தியாசமாக தொழில்நுட்பத்திலும் சரி. நடிப்பிலும் சரி. மேக்கப்பிலும் சரி அப்படித்தான் வந்து கொண்டு இருக்கின்றன. அந்தவகையில் அவது மருதநாயகம் படத்துக்கு தனியிடம் உண்டு. 1997ல் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை எடுப்பதற்காக கமல் ஆரம்பித்தார்.
கமலுடன் சேர்ந்து சுஜாதாவும் கதை எழுத, கமலே நடித்து இயக்கவும் செய்தார். சந்தோஷ் சிவன் ஒளிப்திவுடன் இளையராஜா இசை அமைத்தார். கமலுடன் விஷ்ணுவர்த்தன், நாச், சத்யராஜ் உள்பட பலரும் நடிப்பதற்குத் தயாராக இருந்தார்கள்.
படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டது தனிச்சிறப்பு. இந்தியத் திரை உலகினர் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தது. படத் தொடக்கவிழாவும், டிரெய்லரும் படுமாஸாக இருந்தது. ஆனால் பொருளாதா நிதி காரணமாக இந்தப் படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
மீண்டும் யாராவது ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்துக்கான பட்ஜெட்டை ஏற்க முன்வந்தால் மருதநாயகம் தொடங்கப்படும் என்று கமலே கூறியிருந்தார். இந்தப் படம் வராதா என இன்று வரை ரசிகர்கள் ஏங்கித் தவித்துக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதலாக தற்போது ஒரு தகவல் வந்துள்ளது. வாங்க பார்க்கலாம்.
கே.எச்.238 என்ற தலைப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கமலின் மருதநாயகம் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மருதநாயகம் கமலை ஏன் கொண்டு வர முடியாது. அப்படி கொண்டு வந்தால் ஏஐ தொழில்நுட்பத்துல என்ன வேணாலும் பண்ணலாம் என்ற கான்சப்ட் போய்க்கிட்டு இருக்கு.
கமல் குளோசப்ல நடிக்க வேண்டிய காட்சிகளில் அவரே நடித்துவிட்டு, ஆக்ஷன் காட்சிகளை ஏன் ஏஐ தொழில்நுட்பத்தில் பண்ண முடியாது என்று எண்ணுகிறார்கள். அதனால இன்னும் ஏஐ தொழில்நுட்பத்தில் என்னவெல்லாம் கத்துக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கமல் அமெரிக்கா போவதாகத் தகவல் வந்துள்ளதாம்.
சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தில் நடிக்க வைக்கின்றனர். அதே போல விஜயை டீஏஜிங் தொழில்நுட்பத்தில் இளவயது தோற்றத்திலும் நடிக்க வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.