Connect with us
Indian 2

Cinema History

இந்தியன் 2 ல அப்படி ஒரு விஷயம் இருக்கா? அடுத்த மாசம் டெல்லியே களைகட்டப் போகுதா?

இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. அனிருத்தின் இசையில் 6 பாடல்கள் வெளியாயின. அதிலும் அந்தக் ‘கதறல் சாங்…’ ‘தாத்தா வாராரு’ பாடல் பலரையும் ரசிக்க வைத்தது என்றே சொல்லலாம். இந்தப் படம் குறித்த புதிய தகவல்களை பிரபலம் ஒருவர் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

இதையும் படிங்க… என்னது சிம்புவுக்கு ஜோடி அசினா? போட்டோ சூட்டெல்லாம் எடுத்து டிராப் ஆன படம்.. என்ன ரீசன் தெரியுமா?

இந்தியன் 2 படத்திற்கான ஆடியோ லாஞ்ச் அடுத்த மாதம் ஜூலையில் டெல்லியில் நடக்க உள்ளதாம். இது சென்னையில் நடந்தமாதிரி சினிமா பிரபலங்களுடன் இந்த விழா நடத்தப் போவது இல்லையாம். இண்டியா கூட்டணி தலைவர்களுடன் நடக்க உள்ளதாம். அதுக்காக இந்தியன் 2 படத்தை எப்படி பயன்படுத்துறாங்கன்னு கேள்வி எழலாம்.

இந்தியன் 2 படத்தோட மையக்கதையே ஊழல் தான். இந்த ஊழல் இந்தப் படத்துல காட்டப்படுற விதம் தான் முக்கியம். வங்கி ஊழல், வங்கியைப் பயன்படுத்தி கடன் வாங்கி யார் யாரெல்லாம் பெரிய ஆளா வந்தாங்க? அரசு அமைப்புகளை எல்லாம் எப்படி பாழ்படுத்தினாங்க?

ஊழலை எப்படிப் பரப்புனாங்க? பல்லாயிரக்கணக்கான கோடிகள்ல கடன் வாங்கினவன் எப்படி எல்லாம் தப்பிச்சி வெளிநாட்டுக்குப் போய் ராஜா மாதிரி வாழ்ந்துக்கிட்டு இருக்கான்? அப்படிங்கறதை எல்லாம் இந்தப் படத்துல அலசிருக்காங்களாம். இதை எல்லாம் வெளிக்கொண்டு வர்ற படம் தான் அது.

அதனால இந்த மேடைக்கு அரசியல் தலைவர்கள் எல்லாம் வரணும் என்ற நோக்கத்தில் தான் இந்தப் படத்திற்கு அவர்கள் வர வேண்டும் என்பதால் அந்த அழைப்பு. அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் இருந்தும் கமல் விலகுகிறாராம். அதற்குக் காரணம் அவரது அரசியல் வேலைகள் தான். அகில இந்திய அரசியலில் கமல் தீவிரமாக ஈடுபட உள்ளராம்.

இதையும் படிங்க… திவ்யாவாக திரையுலகை திண்டாட வைத்த சோனியா.. த்ரிஷா நயன் ரேஞ்சுக்கு ஏன் ஜொலிக்க முடியல?

சென்னையில் நடந்த இந்தியன் 2 ஆடியோ விழாவில் காஜல் அகர்வாலின் காட்சிகள் அதிகம் வராதாம். 3ம் பாகத்தில் தான் வருமாம். இந்தியன் 2 படத்தில் பெரும்பாலான காட்சிகளில் இளைஞர் கமல் தான் வாராராம். அப்படின்னா அந்தக் கமலுக்கு ஜோடி யாருன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் தேவமணி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top