எங்களுக்குள்ள ஈகோவா?.. இரு டாப் ஹீரோக்கள் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்!..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக மல்டி ஸ்டாரர் படங்கள் மிகவும் டிரெண்டாகி வருகின்றன. இந்த முறை ஆரம்பகாலத்தில் இருந்தே வந்திருந்தாலும் லோகேஷ் எப்பொழுது விக்ரம் படத்தை இயக்கினாரோ அதில் இருந்தே இந்த நடைமுறை மிகவும் பிரபலமாகி விட்டது. குறிப்பாக மல்டி ஸ்டாரர் என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி விட்டது. அந்த வகையில் இரு டாப் ஹீரோக்கள் மட்டும் நடித்து வெளியான படங்களை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
உல்லாசம் : இன்று முன்னனி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்தபடம் தான் உல்லாசம். இந்தப் படம் நடிக்கும் போது இருவருமே வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் இருந்தார்கள். இருந்தாலும் இருவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தன. ஆனாலும் எந்த ஈகோவும் பார்க்காமல் இருவரும் சேர்ந்து நடித்து கொடுத்த படம் தான் உல்லாசம்.
அன்பே சிவம் : உலக நாயகன் கமல் மற்றும் பெண்களின் கனவு நாயகன் மாதவன் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த படம் அன்பே சிவம். இந்தப் படத்தில் இருவருக்கும் சமமான கதாபாத்திரங்கள் கொடுத்து படத்தை அழகாக கொண்டு போயிருப்பார்கள். மேலும் இது கமல் படமா? இல்லை மாதவன் படமா? என்று கூட சொல்ல முடியாத படி காட்சிகள் இருவருக்கும் சமமாக பிரித்து காட்டப்பட்டிருக்கும்.
பிரண்ட்ஸ் : இந்த படத்தில் நடிக்கும் போதே விஜய் பீக்கில் இருந்த நடிகர். ஆனால் சூர்யா வளர்ந்து வரும் நடிகர்களில் இருந்தார். ஆனாலும் விஜய் எந்த வித ஈகோவும் பார்க்காமல் சூர்யாவுடன் இணைந்து நடித்து கொடுத்த படம் பிரண்ட்ஸ். நட்பின் ஆழத்தையும் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் அழகாக சித்தரித்துக் காட்டும் படமாக பிரண்ட்ஸ் படம் அமைந்தது.
காதலா காதலா : மிகவும் கலகலப்பான காமெடி சார்ந்த படம் தான் காதலா காதலா திரைப்படம். இந்தப் படத்தில் கமல் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் சேர்ந்து நடித்திருப்பார்கள். ஆனாலும் இவர்களுக்குள் எந்த வித ஈகோவும் எந்த ஒரு காட்சியிலும் தெரியாது. படம் முழுக்க நகைச்சுவையை அள்ளி வீசியிருப்பார்கள் கமலும் பிரபுதேவாவும். ஒரு சூப்பரான எண்டெர்டெய்ன்மெண்ட் படமாக அமைந்திருந்தது.
அக்னி நட்சத்திரம் : மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் முழு ஆதரவை பெற்று வெற்றி அடைந்தப் படம். இதில் கார்த்திக் மற்றும் பிரபு ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் நடிக்கும் போது இருவருமே நல்ல ஒரு பீக்கில் இருந்த நடிகர்கள் தான். ஆனாலும் கதைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு நல்ல முறையில் நடித்துக் கொடுத்தப் படம் தான் அக்னி நட்சத்திரம்.
இதையும் படிங்க : இரட்டையர்களாகவே பிறந்திருக்கலாம்பா!.. அப்படி டபுள் ஆக்டிங் ரோலில் நடித்து அசத்திய நடிகர்கள்…