More
Categories: Cinema History Cinema News latest news

பாக்யராஜ்ஜிற்கே தெரியாமல் பல நாட்களாக உதவி இயக்குனராக பணிபுரிந்த பாண்டியராஜன்… பலே கில்லாடிதான்!!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகருமாக திகழும் பாண்டியராஜன், தொடக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார். மேலும் அவர் வயலின் வாசிக்கவும் கற்றுக்கொண்டிருந்தார். அப்போது சினிமாவில் உதவி இயக்குனராக ஆக வேண்டும் என நினைத்து “தேவர் பிலிம்ஸ்” நிறுவனத்தின் வாசலில் தினமும் சென்று நிற்பாராம்.

Pandiarajan

தூயவன்

Advertising
Advertising

அப்போது ஒரு நாள் பிரபல திரைக்கதை ஆசிரியரான தூயவன், பாண்டியராஜனை பார்த்து, “உன்னை ரொம்ப நாளா நான் இங்க பார்க்குறேனே!” என அவர் கேட்க, அதற்கு பாண்டியராஜன் “ரொம்ப நாட்களாக எல்லாம் இல்லை. 126 நாளா இங்க நிக்கிறேன்” என நகைச்சுவையோடு கூறினாராம்.

Thooyavan

அப்போது தூயவன் “நல்ல எழுதுவியா?” என கேட்டாராம். “நான் நல்லா எழுதுவேன்” என பாண்டியராஜன் கூற “எங்கே எழுதிக்காட்டு” என கேட்டாராம் தூயவன். உடனே பாண்டியராஜன் ஒரு பேப்பரில் எழுதி காட்டினார். பாண்டியராஜனின் கையெழுத்து அழகாக இருக்கவே தூயவன், பாண்டியராஜனை தனக்கு உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.

பாக்யராஜ்ஜை பார்த்து வியந்த பாண்டியராஜன்

அந்த காலகட்டத்தில் பாக்யராஜ் நடித்து இயக்கிய “சுவரில்லா சித்திரங்கள்” திரைப்படம் வெளிவந்தது. அத்திரைப்படத்தை பார்த்த பாண்டியராஜனுக்கு அப்படம் மிகவும் பிடித்துப்போனது. உதவி இயக்குனராக சேர்ந்தால் பாக்யராஜ்ஜிடம்தான் உதவி இயக்குனராக சேர வேண்டும் என அப்போதே முடிவு செய்தார்.

Suvarilla Siththirangal

பாக்யராஜ்ஜிற்கே தெரியாத உதவி இயக்குனர்

பாக்யராஜ்ஜிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் பாக்யராஜ்ஜிடம் இருந்த உதவி இயக்குனர்களிடம் நெருக்கமாக பழகி வந்தார் பாண்டியராஜன். இதன் மூலம் பாக்யராஜ்ஜிற்கே தெரியாமல் அவரின் திரைப்பட படப்பிடிப்புகளில் உதவி இயக்குனர்களில் ஒருவராக கலந்திருப்பாராம் பாண்டியராஜன்.

Pandiarajan

கிளாப் அடித்து மாட்டிக்கொண்ட பாண்டியராஜன்

இந்த நிலையில் ஒரு நாள் படப்பிடிப்பில் கிளாப் அடிக்க வேண்டிய உதவி இயக்குனர் வராத காரணத்தால், சக உதவி இயக்குனர்கள் பாண்டியராஜனை கிளாப் அடிக்குமாறு கூறியுள்ளனர். இவரும் ஆர்வத்தில் உடனே வந்து கிளாப் அடித்துவிட்டாராம். அந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு பாக்யராஜ், “கிளாப் அடிச்சது யாரு?” என தேடினாராம். அப்போது பயந்துபோய் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்த பாண்டியராஜனை பார்த்திருக்கிறார்.

இதையும் படிங்க: பிரபல காமெடி நடிருக்கு நேர்ந்த பரிதாபம்… “என்னை தப்பு தப்பா பேசுறாங்க”… மனைவி கொடுத்த கண்ணீர் பேட்டி…

Bhagyaraj

“நீதான் கிளாப் அடிச்சியா?” என பாக்யராஜ், பாண்டியராஜனை பார்த்து முறைத்திருக்கிறார். அப்போது உடனே பாண்டியராஜன் ஓடிச் சென்று பாக்யராஜ்ஜின் காலில் விழுந்து “பல நாட்களாக உங்களிடம் உதவி இயக்குனராக சேர வேண்டும் என முயற்சி செய்கிறேன். எனக்கு பெற்றோர் என யாரும் இப்போது இல்லை. எனக்கு சினிமாவை விட்டால் வேறு கதியும் இல்லை” என கெஞ்சினாராம். இந்த சென்டிமெண்ட்டால் பாண்டியராஜனை பாக்யராஜ் தன்னுடைய உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.

Published by
Arun Prasad

Recent Posts