Connect with us
jaya

Cinema History

ஜெயலலிதாவை பாக்கனும்னா கண்டிப்பா இத பண்ணனுமாம்! இல்லனா நடக்குறதே வேற – பிரபலம் சொன்ன தகவல்

Actress Jayalalitha: தமிழ் சினிமாவில் சாவித்ரி, பத்மினி, பானுமதி என கோலோச்சி இருந்த நடிகைகளின் மத்தியில் தன் அழகாலும் திறமையாலும் அவர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளியவர் நடிகை ஜெயலலிதா. சினிமாவில் நுழைந்ததுமே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த காலத்தில் மாடர்ன் டிரெஸில் கலக்கிய நடிகையாக ஜெயலலிதா திகழ்ந்தார். கான்வெண்டில் படித்தவர். அதனால்தான் என்னவோ மிகத்தைரியமாகவும் துணிச்சலானவராகவும் இருந்தார். ஜெயலலிதாவின் வளர்ச்சி உயர உயர அவர் மீது அனைவருக்கும் ஒரு பயம் கலந்த மரியாதை பிறந்தது.

இதையும் படிங்க:ரஜினிக்கும் உங்களுக்கும் கல்யாணம்னு நியூஸ் வந்துச்சே!.. என்ன மேட்டர்?.. ஓபனா பேசிய பிரபல நடிகை!..

அவ்வளவு எளிதாக ஜெயலலிதாவிடம் யாரும் பழகிவிட முடியாது. சகஜமாக பேசக்கூடிய நடிகையாகவும் ஜெயலலிதா அப்போது இல்லை என்பதுதான் உண்மை. படப்பிடிப்பில் கூட அவர் காட்சிகள் முடிந்ததும் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு புத்தகங்களைத்தான் படித்துக் கொண்டு இருப்பாராம்.

வீண் கதைகள் பேசுவது, சக நடிகர்களிடம் உரையாடுவது என்ற பழக்கத்தை ஜெயலலிதா வைத்துக் கொண்டதே இல்லையாம். இந்த நிலையில் ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களை எப்படி நடத்துவார் என்று ஒரு ரசிகர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டிருந்தார்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல்: கதிருக்கு செக் வைத்த ஜீவானந்தம்… கதையில நடந்த பெரிய டிவிஸ்ட்… உனக்கு தேவைதான்…

ஜெயலலிதா நடிகையாக இருந்த சமயத்தில் சித்ரா லட்சுமணன் பத்திரிக்கை செய்தி தொடர்பாளராக இருந்தார். அதனால் ஜெயலலிதாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு சித்ரா லட்சுமணனுக்கு இருந்திருக்கிறது. ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களை ஒரு ஹீரோவுக்கு இணையாக வைத்துதான் நடத்துவாராம்.

தன்னை பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தால் பத்திரிக்கையாளர்கள் போவதற்கு முன்பே அங்கு தயாராக ஜெயலலிதாவுக்கு அருகில் ஒரு நாற்காலி போட்டு ரெடியா இருப்பாராம். வந்ததும் டீ, காபி, ஜூஸ் என மிகவும் மரியாதையாக நடத்துவாராம். ஆனால் இதெல்லாம் முன் அனுமதி பெற்று போனால்தான் நடக்குமாம்.

இதையும் படிங்க: மைக் மோகன்னு சொன்னாங்க!.. கடைசியில மனோபாலாவுக்கே சிலை வச்சிட்டாங்களா ரஜினி ரசிகர்கள்!..

ஆனால் எந்தவொரு அனுமதியும் இல்லாமலோ அல்லது படப்பிடிப்பில் ஹீரோவை பார்க்க போய் ஜெயலலிதாவையும் பார்த்துவிட்டுவரலாம் என்று நினைத்து  போனாலோ அங்கு நடக்கும் சம்பவவே வேறயாம். ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க மாட்டார்களாம். எந்தவொரு உபசரிப்பும் இருக்காது என சித்ரா லட்சுமணன் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top