மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி ஐந்தே நாட்களில் 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இந்த படத்தில் முதல் பாதி செமயாக இருக்கிறது என்று இரண்டாம் பாதி சுமாராக இருக்கிறது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் சினிமாவுகு்கு வந்தவர்களில் இயக்குநர் மடோன் அஸ்வினும் ஒருவர். இவர் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மாவீரன் படத்திற்கு முன்னார் இவர் யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான திரைக்கதையுடன் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் எடுத்து ஹிட் கொடுத்தார். முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை தட்டிச்சென்றார் மடோன் அஸ்வின். சிறந்த வசனம் மற்றும் சிறந்த அறிமுக இயக்குநர் என்ற 2 தேசிய விருதுகளை மண்டேலா படத்திற்காக பெற்றார்.
தேர்தலையும், அரசியலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட மண்டேலா படத்தில் பல அரசியல் கருத்துக்கள் விவாதப்பொருளானது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மண்டேலா படத்தில் அரசியல் புரிதல் இல்லாமல் ஒரு காட்சியில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து தவறாக காட்சி படுத்தி படம் எடுத்துவிட்டேன். இலவசங்கள் குறித்து அந்த சமயத்தில் எனக்கு தெளிவான புரிதல் இல்லை.
படம் வெளியாகி, பலர் விமர்சித்த பிறகு, அது பற்றி படித்து புரிந்துகொண்டேன் என தெரிவித்துள்ளார். மண்டேலே படத்தில் அது போன்ற காட்சிகள் இடம்பெற்றதற்கு வருந்துகிறேன். மேலும் எனக்கு அரசியல் புரிதல் இல்லை. இப்போது தான் அரசியல் படித்து தெரிந்துகொண்டிருக்கிறேன். இனி மக்களுக்கு சரியான கருத்துக்களை படத்தில் கூற வேண்டும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- டிக்கெட் விலையை குறைக்கனுமா? அந்த நாலு ஹீரோவாலதான் முடியும் – விஜய் ஆண்டனி சொன்ன யோசனை
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…