
Flashback
ரஜினினு ஒருத்தர் இல்லைன்னா கமல் வந்திருக்கவே முடியாது! இவரே சொல்றாருனா கரெக்ட்தான்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை படங்களில் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல். இவருக்கு அடுத்தபடியாக சினிமாவில் காலெடி எடுத்து வைத்தவர்தான் ரஜினி. ஆனால் இன்று கமலை விட ரஜினிக்கு மாஸ் அதிகம். ஓப்பனிங் சிறப்பானதாக இருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸிலும் கலக்கி வருகிறார் ரஜினி.ஆனால் கமலுக்கு அந்தளவு ஓப்பனிங்கோ கலெக்ஷனோ இல்லை.
ஒரு வில்லனாக அறிமுகமாகி துணை நடிகராக நடிகராக ஹீரோவாக என பல பரிமாணங்க எடுத்து இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினி. ஆனால் கமல் சினிமாவில் அவருடைய எல்லை முடிந்து விட்டதாகவே தெரிகிறது. அவர் நடிப்பில் கடைசியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் சொதப்பியது. அடுத்ததாக தக் லைஃப் படம்தான் அவரை காப்பாற்ற வேண்டும்.
அது ஒரு வேளை வெற்றிப்பெற்றால் சினிமாவில் அவரால் தாக்கு பிடிக்க முடியும்.இல்லையெனில் அரசியலில் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக் கொண்டு போய் அமர்ந்துவிடுவார். இந்த நிலையில் ரஜினி , கமல் பற்றி கமலின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் ஒரு பழைய பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அது சம்பந்தமான உரையாடல்தான் இப்போது இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.
ரஜினி ஒரு கடவுள் என சாருஹாசன் சொல்ல ‘ஒரு நாத்திகன்னா இருந்து ரஜினியை கடவுளாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?’ என நிருபர் கேட்க அதற்கு சாருஹாசன் ‘ஓஹோ ரஜினி இல்லைனு சொல்ல முடியாது. கடவுள் இல்லைனு நான் சொல்ல முடியும்.அதுதான் வித்தியாசம், ரஜினி இருக்கிறார். கடவுள் இல்லை’ என கூறினார். அப்போ ரஜினியை நீங்க கடவுளா பார்க்கிறீங்கனு கேட்டதற்கு ‘ நான் பாக்கல. மக்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள்’ என சாருஹாசன் கூறினார்.
ரஜினி என்ற ஒருத்தர் படத்தில் இல்லாவிட்டால் கமல்ஹாசன் என்ற ஒருத்தர் வந்திருக்கவே முடியாது. ரஜினியை தேர்ந்தெடுப்பதே கமல்ஹாசனை வேண்டாம் என்பதற்காகத்தான். வசூலில் கணக்கு பண்ணி பாருங்க. எல்லாமே கணக்குத்தான். எத்தனை பேரு கமல் படம் பார்க்கிறார்கள். எத்தனை பார் ரஜினி படம் பார்க்கிறார்கள் என எல்லாருக்குமே தெரியும். இன்னொரு விஷயம் என்னவெனில் பெரிய அறிவாளியாக திகழ்கிறவனை யாருக்குமே பிடிக்காது என்றும் சாருஹாசன் கூறினார்.
அப்போ ரஜின் அறிவாளி இல்லைனு சொல்றீங்களா என்ற கேள்வி சாருஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘தான் அறிவாளினு ரஜினி வெளியே சொல்வதில்லை. ஆனால் கமல் சொல்வார். எனக்கு என்ன தெரியும்ங்கிறத சொல்வாரு. அவர் பேசும் போதே தெரிந்துவிடும்’ என ரஜினி மற்றும் கமல் இவர்களுக்கிடையே இருக்கும் வித்தியாசத்தை பற்றி சாருஹாசன் ஒரு பழைய பேட்டியில் கூறியிருக்கிறார்.