Homelatest newsWith Love: ரசிகர்கள் கொண்டாடும் வித் லவ்!… முதல் நாள் வசூல் அப்டேட்!..

With Love: ரசிகர்கள் கொண்டாடும் வித் லவ்!… முதல் நாள் வசூல் அப்டேட்!..

அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம்தான் வித் லவ். இந்த படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.. அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த படத்திற்கான சிறப்பு காட்சியை பார்த்த பலரும் படம் சிறப்பாக இருப்பதாகவும், ஒரு சூப்பர் பீல் குட் படம் என்றும் பாசிட்டிவாக விமர்சனங்களை சொன்னார்கள்..

படம் பார்த்த எல்லோருமே இப்படத்தை பாராட்டியதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் வெளியான பின்னரும் இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இப்படம் இந்தியாவில் 1.5 கோடி வசூல் செய்திருக்கிறது.

படத்துக்கு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவதால் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. இந்தப் படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா மற்றும் மேலும் இரண்டு பேரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments